கஸ்தூரி ராஜா
கஸ்தூரி ராஜா | |
---|---|
பிறப்பு | கிருஷ்ணமூர்த்தி 8 ஆகத்து 1946 மல்லிகாபுரம், தேனி, தமிழ்நாடு |
பணி | திரைப்பட இயக்குநர், திரைப்பட தயாரிப்பாளர் , இசையமைப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1991–2006, 2013 |
பெற்றோர் | ராமசாமி நாயுடு[1] ரங்கம்மா |
வாழ்க்கைத் துணை | விஜயலட்சுமி |
பிள்ளைகள் |
|
கஸ்தூரி ராஜா ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் , மற்றும் இசையமைப்பாளர் ஆவார். தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவராவார். செல்வராகவன், நடிகர் தனுஷ் ஆகியோர் இவரது மகன்களாவர்.[2][3] இவரது திரைப்படங்கள் பெரும்பாலும் கிராமக்கதையை பின்னணியாகக் கொண்டு அல்லது இளைஞர்களின் தடுமாற்றங்களைப் பற்றியே அமைந்துள்ளன.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]தேனி மாவட்டத்தில் மல்லிகாபுரம் என்ற குக்கிராமத்தில் ராமசாமி நாயுடுவிற்கும்[1] ரங்கம்மாவுக்கும் மகனாக பிறந்தவர். இவர் கே. எஸ். கோபாலகிருஷ்ணன், விசு ஆகிய இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக இருந்து ராஜ்கிரண் மூலம் என் ராசாவின் மனசிலே படத்தில் இயக்குநராகியவர். இவர் தொடர்ந்து ஆத்தா உன் கோயிலிலே, நாட்டுப்புறப் பாட்டு, வீரத்தாலாட்டு, எட்டுப்பட்டி ராசா, வீரம் விளைஞ்ச மண்ணு, என் ஆச ராசாவே உட்பட நிறைய படங்களை இயக்கியவர். இவரின் படங்கள் பெரும்பாலும் மண் மணம் வீசும் படங்களாக இருக்கும். இயக்குநர் செல்வராகவன், நடிகர் தனுஷ் ஆகியோர் இவரின் மகன்கள் ஆவர்.
அரசியல்
[தொகு]2015 ஆம் ஆண்டு அமித் சா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
இவர் தற்போது தமிழக பாஜக மாநில செயற்குழு உறுப்பினர்களாக உள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 கஸ்தூரி ராஜா. https://www.youtube.com/watch?v=2xiZF9zAZrM?t=270. "அப்பா பெயர் ராம்சாமி நாயுடு".
- ↑ தமிழிசை சவுந்தரராஜன் வீரத் தமிழச்சி - தனுஷ் தந்தை புகழாரம்!. நியூஸ் 18. 16 அக்டோபர் 2019.
- ↑ http://www.thehindu.com/news/national/tamil-nadu/hc-quashes-maintenance-case-filed-against-dhanush/article18179600.ece