உள்ளடக்கத்துக்குச் செல்

கழுகு நடவடிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கழுகு நடவடிக்கை
Operation Eagle
ஈழப் போர் பகுதி
நாள் 3, யூலை 1990
இடம் யாழ்ப்பாணம், இலங்கை
இலங்கை இராணுவம் வெற்றி
பிரிவினர்
இலங்கை இலங்கை ஆயுதப் படைகள் தமிழீழ விடுதலைப் புலிகள்
இழப்புகள்
0 தெரியவில்லை

கழுகு நடவடிக்கை (Operation Eagle (Sri Lanka)) என்பது இலங்கை இராணுவத்தால் பிடிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தின் பழைய டச்சு கோட்டையைத் தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றுகை இட்ட நிலையில் கோட்டையில் பலத்த காயமுற்ற வீரர்களை மீட்பதற்கான இலங்கை வான்படையால் 3, யூலை, 1990 அன்று மேற்கொள்ளப்பட்ட ஒரு இராணுவ நடவடிக்கையாகும். இந்த வெற்றிகரமான மீட்பு நடவடிக்கை தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றது. இது தீவில் சிங்களர் வாழும் பகுதி முழுவதும் மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அவர்களின் மன உறுதியை அதிகரிக்க உதவியது.

பருந்துப்பார்வை

[தொகு]

விடுதலைப் புலிகள் சமாதான பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகி, போர் நிறுத்தத்தை மீறிய நிலையில், யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள பலாலி, யாழ்ப்பாணக் கோட்டை, கிளிநொச்சி, மாங்குளம், கொக்காவில் போன்ற பல இராணுவத் தளங்களும், பிரதேசங்களும் புலிகளால் முற்றுகையிடப்பட்டன. தலைமன்னார் இராணுவப் படைப்பிரிவு முறியடிக்கப்பட்டது. ஆனையிறவு மற்றும் முல்லைத்தீவு உள்ள தளங்கள் தாக்குதலுக்கு உள்ளானாயின, என்றாலும் அவை வீழாமல் தாக்குப்பிடித்தன. இந்த கட்டத்தில் 200 க்கும் மேற்பட்ட இராணுவத்தினரும், காவல்துறையினருடன் இருந்த யாழ்ப்பாணக் கோட்டை முற்றுகையிடப்பட்ட நிலையிலிருந்தது அதிக கவனத்தை ஈர்த்தது.

லெப்டினன்ட் ஜயந்த பெரேராவின் தலைமையில் இலங்கை சிங்கப் படையணியின் 6வது படைப்பிரிவினர் யாழ்ப்பாணக் காவல் நிலையக் காவலர்களின் ஆதரவுடன் கோட்டையை திறம்படக் காத்த போதிலும், உணவு, வெடிமருந்துகள் போன்றவற்றிற்குப் பற்றாக்குறையாகவே இருந்தது. எட்டு சேவை பணியாளர்கள் மோசமாக்க் காயமடைந்து, வெளியேற்றப்பட்டனர். கடுமையான துப்பாக்கிச் சூடு ஆரணமாக உலங்குவானூர்தி தரையிறங்க முடியாததால் மூலம் முந்தைய வான்வழி மீட்பு முயற்சி தோல்வியடைந்தது. இந்த நிலையில் மற்றொரு மீட்பு முயற்சியை மேற்கொள்ள விமானப்படைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.

ஆயத்தம்

[தொகு]

இலங்கை விமானப்படையின் ஏர் மார்ஷல் டெரன்ஸ் குணவர்தன மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ள உத்தரவிட்டார். வடக்கு பகுதி ஏர் ஆபரேஷன்ஸ் கமாண்டர் விங் கமாண்டர் சுனில் கப்ரால் இந்த பயணத்தின் செயல்பாட்டுக் கட்டளை தளபதியாகப் பொறுப்பேற்றார். அந்த நேரத்தில் விமானப்படையின் பணியாளர் அதிகாரியாக இருந்த மறைந்த மேஜர் ஜெனரல் டென்ஸில் கோபேகடுவா கோக் தைரியமான தரையிறக்கும் பணியை மேற்கொள்வதற்கு முன்வந்தார். இந்த பணியில் அவர் லெப்டினன்ட் அவிந்திரா மிராண்டோவை தனது இணை விமானியாகவும், ரவுலா பெர்னாண்டோ, விமலதர்ம சூரியதாசா ஆகியோரை விமான சுடுகலனை இயக்குபவர்களாகவும் தேர்ந்தெடுத்தார்.[1]

இந்த நடவடிக்கைக்குக் குறியீடு பெயராக ஆபரேஷன் ஈகிள் என இடப்பட்டது. 3, யூலை, 1990 அதிகாலையில் இந்த நடவடிக்கைக்குத் திட்டமிடப்பட்டது.

நடவடிக்கை

[தொகு]

யூலை 3, எச் ஹவர் 0505 10 நிமிடங்களுக்கு முன்பு வானூர்தி தளத்தில் ஆயத்தமாக இருந்தது மற்றும் ஆபரேஷன் கமாண்டர் மூலம் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும் லசந்த மோசமான விளக்கு குறித்துப் புகாரளித்தார். இதனால் நடவடிக்கை சிறிது நேரம் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டது. பல நிமிடங்கள் கழித்து வைத்யரத்ன லசந்த வானூர்தியை 50 அடிக்குக் கீழே கொண்டு வந்தார், மேலும் கட்டளைத் தளபதியால் விமானப் பாதுகாப்பு இல்லாமல் தரையிறக்க உத்தரவு வழங்கப்பட்டது. லசந்த கோட்டையை நெருங்கினார், மேலும் பீரங்கி வானூர்திகள் சில நொடிகளுக்கு முன்பே தாக்கி, பாதுகாப்பை அளித்தன. கோட்டைக்கு அருகில் வந்தவுடன், வைத்தியரத்ன 90-பாகை திரும்பினார். மேலும் கீழே இறங்கி, ஆக்ரோஷமான துப்பாக்கிச் சூட்டைத் தொடங்க வேண்டாம் என்று தனது சொந்தத் துப்பாக்கிச் சூடிகளுக்கு அறிவுறுத்தி, 8 வடிவத்தில், வட்டமிட்டுக் குறிப்பிட்ட இடத்தில் ஊர்தியை நிலைநிறுத்தினார். ஒரு நிமிடத்திற்குள் மீட்பு உலங்குவானூர்தி தனது பணியை வெற்றிகரமாக முடித்தது. ஊர்தியில் புதிய கட்டளை அதிகாரி, மருத்துவ குழுவினர், பொருட்கள், கனரக ஆயுதங்கள், பலத்த காயமடைந்த எட்டு வீரர்கள், போலீசார் ஆகியோர் ஏற்றப்பட்டனர். இந்த கட்டத்தில் சியா மார்செட்டிக வானூர்திகள் தங்கள் குண்டுவீச்சை ஓட்டத்தை மேற்கொண்டன. இதனால் அதிர்ச்சியடைந்த புலிகள் நிகழ்விடத்திற்கு வந்தனர் அவர்கள் பீரங்கி வானூர்திகளால் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.[2]

உலங்குவானூர்தியானது தரையில் ஒரு நிமிடத்தை விடக் குறைவான நேரத்திலிருந்து தன் பணியை முடித்துப் பறந்தது. கோட்டையின் பிரதான வாயிலுக்கு அருகில் பதுங்கு மாடத்தில் இருந்த புலிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினார். ஆனால் அதையும் மீறி 2000 அடி உயரத்தை அடைந்து, லசந்த முகாமை வந்தடைந்தார்.

பின்விளைவுகள்

[தொகு]

இந்த பணி முழு வெற்றியடைந்தது. காலையில் இலங்கை முழுவதும் இந்த தைரியமான மீட்பு நடவடிக்கை குறித்த பற்றி அறிக்கபட்டது. ஊடகங்கள் இந்த நடவடிக்கையை ஒரு துல்லியமாகத் திட்டமிடப்பட்ட மற்றும் அற்புதமாகச் செயல்படுத்தப்பட்ட நடவடிக்கை. என்று குறிப்பிட்டன. இந்த ஒற்றை நிகழ்வு கோட்டையில் உள்ள துருப்புக்களின் மன உறுதியைக் கூட்டியது.

இறுதியில் திரிவித பாலயா நடவடிக்கை மூலம் கோட்டை முற்றுகை உடைக்கப்பட்டது. மேலும் உலங்கு வானூர்தியில் மீட்ட நடவடிக்கையானது அதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கழுகு_நடவடிக்கை&oldid=3958487" இலிருந்து மீள்விக்கப்பட்டது