உள்ளடக்கத்துக்குச் செல்

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சாவுகள், 2024

ஆள்கூறுகள்: 11°44′17″N 78°57′55″E / 11.73815°N 78.96540°E / 11.73815; 78.96540
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சாவுகள், 2024
Map
Map
நாள்சூன் 20, 2024 (2024-06-20)
அமைவிடம்கள்ளக்குறிச்சி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
வகைவிசச்சாராயம்
காரணம்சாராயத்தில் மெத்தனால் நச்சு
இறப்புகள்58
காயமுற்றோர்~200
கைதுகள்3

2024 ஆம் ஆண்டு யூன் 18 அன்று கள்ளச்சாராயத்தை குடித்ததால் கள்ளக்குறிச்சியில் 58 இக்கும் மேற்பட்டோர் இறந்தனர், 100 இக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். [1]

காரணம்[தொகு]

கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழப்பு ஏற்படவில்லை என்று துவக்கத்தில் மாவட்ட ஆட்சியர் கூறினார், அதுவே உயிரிழப்பு அதிகமானதற்கு காரணமாக கூறப்படுகிறது [2] [3] [4] கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து சுரேசு வயிறு வலிக்கிறது என்று துடித்தவரை தூக்கிக்கொண்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் சிகிச்சை வழங்கியும் இவர் இறந்துவிட்டார் இவரே கள்ளச்சாராயம் குடித்ததால் முதலில் இறந்தவர் [5]

கருணாபுரத்தை சேர்ந்த சுரேசு என்பவர் கள்ளச்சாராயம் குடித்து முதலில் உயிரிழந்துள்ளார். பின் சுரேசின் இறுதி சடங்கிற்கு சென்றவர்களும் கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். அவர்களில் பலர் உயிரிழந்துள்ளனர் [6] யூன் 18 இரவு 11 மணிக்கு பிரவீண் என்பவர் விசச்சாராயம் குடித்துள்ளார். நள்ளிரவு 12.30 மணிக்கு அவரது உடல்நலம் பாதிக்கப்படுகிறது. வயிறுவலி, கண்பார்வை எரிச்சல் போன்றவை பாதிப்பிற்கு உள்ளானதால் பிரவீனை உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த அரசு மருத்துவர்கள், பிரவீன் மது அருந்தி இருப்பதால் சிகிச்சை அளிக்க முடியாது என கூறி வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். உடல்நலம் எதனால் பாதிக்கப்பட்டது என்பதை மருத்துவர்கள் உடனடியாக பரிசோதனை செய்திருந்தால் அடுத்தடுத்து நடந்த சம்பவங்களை தடுத்திருக்கலாம் என அக்குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். பிரவீன் அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் வீட்டிற்கு அனுப்பப்பட்ட நிலையில், யூன் 19 ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு பிரவீணின் உறவினர் சுரேசும் விஷச்சாராயம் குடித்துள்ளார்.[7]

விமர்சனம்[தொகு]

கள்ளச்சாராயம் காரணமாக பெற்றோரை இழந்த மூன்று குழந்தைகளின் கல்வி செலவை அதிமுக அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஏற்கும் என்று பழனிச்சாமி அறிவித்திருக்கிறார். இக்குழந்தைகளுக்கு அடுத்த 10 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.5000 வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார் [8]

2023 ஆம் ஆண்டு செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கள்ளச் சாராயம் குடித்து 22 இக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தபோது, 'கள்ளச் சாராயம் விற்பனை தமிழகத்தில் அதிகரித்துள்ளது. அதனை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்' என்று அப்போதும் நான் சொன்னேன். அதற்கு முதலமைச்சர் திரு. தாலின் அவர்கள் நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லி, வழக்கை குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறையிடம் (CBCID) ஒப்படைத்தார். அந்த வழக்கு இதுவரை என்ன ஆனது என்று தெரியவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி தெரிவித்தார்[9]

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. [10]

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் நடுவண் புலனாய்வுச் செயலகம் (CBI) விசாரணை கோரி சென்னையில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி க. பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க-வினர் இன்று காலை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், நேரில் கலந்துகொண்டு அ.தி.மு.க-வின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்த தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விசயகாந்த், ``கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் தி.மு.க முழுமையான பொறுப்பை ஏற்க வேண்டும்" என வலியுறுத்தினார். அ.தி.மு.க-வினர் மேற்கொண்டுவரும் பட்டினி அறப்போராட்டத்துக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று சீமான் ட்வீட் செய்தார் [11]

தமிழக சட்டமன்றம் கடந்த 22 ஆம் தேதி கூடியது. தொடர்ந்து காலை மாலை சட்டசபை நடந்து வந்தது. 29 ஆம் தேதி அன்று சட்டசபையில், காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு தறை தொடர்பான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் கள்ளச்சாராய மரணம் தொடர்பாக பேசியபோது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அரசின் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாசுமாக்) கடைகளில் விற்கப்படும் மதுபானம் குளிர் பானம் போல உள்ளதாகவும் அதில் அதிக போதை இருபு்பதில்லை என்பதற்காக சிலர் கள்ளச்சாராயம் குடிக்கிறார்கள் என்று கூறினார். [12]

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் மாநில அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, யூன் 01 எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் கறுப்புச் சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்துள்ளனர். [13]

கள்ளச்சாராய புழக்கத்தை கட்டுப்படுத்த தவறியதை கண்டித்தும், புதுச்சேரி மாநில அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அண்ணாசிலை அருகில் யூன் 24 அன்று நடந்தது.[14]

நிவாரணம்[தொகு]

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50,000மும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். முழுமையான விசாரணை மேற்கொண்டு, கள்ளச்சாராயத்திற்கான அனைத்து காரணங்களையும் கண்டறிந்து எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாசு தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்க முதலவர் ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார். [15]

எதிர்ப்பு[தொகு]

முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டது பெரும் விவாதத்தையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.அரசு கருவூலத்திலிருந்து கோடிக்கணக்கில் நிவாரணம் அறிவிப்பது எந்த வகையில் நியாயம்? என சமூக ஆர்வலர்களும் பல அரசியல் கட்சித் தலைவர்களும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். அரசியல்வாதிகள் பிரேமலதா விசயகாந்த், சீமான்; திரைப்படத்துறையின் பார்த்திபன், கசுத்தூரி ; எழுத்தாளர் பா. ராகவன் ; சட்டப் பஞ்சாயத்து இயக்கம் ; உயர் நீதிமன்ற நீதிபதி சுரேசு குமார் முதலியோரும் இதில் அடக்கம். [16] [17] [18]

மேற்கோள்கள்[தொகு]

  1. 65 உயிர்களை காவு வாங்கியும் அடங்காத அரக்கன்கள்... கள்ளக்குறிச்சியில் மீண்டும் கள்ளச்சாராயம்
  2. கள்ளச்சாராயம் குடித்ததால் மரணம் என்பது உண்மை அல்ல: மாவட்ட ஆட்சியர்!
  3. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்; பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு..ஆட்சியர் இடமாற்றம்; போலீஸ் எஸ்.பி பணியிடை நீக்கம்..!
  4. கள்ளச்சாராயம்: 16பேர் பலி எதிரொலி : மாவட்ட கலெக்டர் இடமாற்றம் எஸ்.பி., சஸ்பெண்ட்
  5. கள்ளக்குறிச்சி: ஒரே நேரத்தில் தாய், தந்தை இருவரையும் இழந்து தவிக்கும் குழந்தைகள் - பிபிசி கள ஆய்வு
  6. விஷச்சாராயம்: சிகிச்சை அளிக்காத மருத்துவர்கள்? தகவல் கிடைத்தும் கண்டுகொள்ளா காவல்துறை? என்ன நடந்தது?
  7. விஷச்சாராயம்: சிகிச்சை அளிக்காத மருத்துவர்கள்? தகவல் கிடைத்தும் கண்டுகொள்ளா காவல்துறை? என்ன நடந்தது?
  8. கள்ளச்சாராயத்தால் நிர்க்கதியான குழந்தைகள்! 10 ஆண்டுகளுக்கான கல்வி செலவை அதிமுக ஏற்கிறது: இ.பி.எஸ்
  9. ADMK: இரண்டாவது மிகப்பெரிய கள்ளச் சாராய மரணம் இது.. திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!
  10. 38 பேர் பலி.. கள்ளச்சாராய மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி அதிமுக வழக்கு..! - kallakurichi kallacharayam
  11. கள்ளச்சாராய விவகாரம்: CBI விசாரணை கோரிக்கையும்... அதிமுக-வின் உண்ணாவிரதப் போராட்டமும்!
  12. டாஸ்மாக் சரக்கில் கிக் இல்லை.. அதனால்தான் கள்ளச்சாராயம் குடிக்கிறார்கள்.. அமைச்சர் துரைமுருகன்
  13. கள்ளக்குறிச்ச்சி கள்ளச்சாராய சம்பவம்: சட்டப்பேரவைக்கு கறுப்பு சட்டையில் வந்த அதிமுக எம்எல்ஏக்கள்
  14. கள்ளச்சாராயத்தை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
  15. கள்ளச்சாராய உயிரிழப்பு: ரூ.10 லட்சம் நிவாரணம்; ஒரு நபர் விசாரணை ஆணையம் - முதல்வர் ஸ்டாலின்!
  16. கள்ளச்சாராய சாவுக்கு 10 லட்சம் நிவாரணம்; இது சரியா முதல்வரே?'- விமர்சனத்துக்குள்ளான அரசு அறிவிப்பு!
  17. கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது தவறான முன்னுதாரணம் - பிரேமலதா விஜயகாந்த்!
  18. குடும்ப தலைவிக்கு ரூ.1000 தான்.. குடிச்சு செத்தா 10 லட்சமா? கொந்தளித்த சீமான்!