உள்ளடக்கத்துக்குச் செல்

கல்விச் சீர்திருத்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கல்விச் சீர்திருத்தம் (Education reform) என்பது பொதுக் கல்வியின் குறிக்கோள் மாற்றத்தினைக் குறிப்பதாகும். படித்த தனிநபர் அல்லது படித்த சமூகத்தில் கல்வியினால் எந்தமாதிரியான அனுபவங்கள் ஏற்படுகின்றன என்பது குறித்த விவாதங்களின் மூலம் கல்வியின் பொருளும் கல்வி முறைகளும் மாறிவிட்டன. வரலாற்று ரீதியாக, கல்விச் சீர்திருத்தத்திற்கான உந்துதல்கள் சமூகத்தின் தற்போதைய தேவைகளைப் பிரதிபலிக்கவில்லை. சீர்திருத்தத்தின் ஒரு நிலையான கருப்பொருள், கல்வித் தரத்தில் பெரிய முறையான மாற்றங்கள் குடிமக்களின் சுகாதாரம், செல்வம் மற்றும் நல்வாழ்வில் சமூக வருவாயை உருவாக்கும் என்ற கருத்தை உள்ளடக்கியது.

பரந்த சமூக மற்றும் அரசியல் செயல்முறைகளின் ஒரு பகுதியாக, கல்விச் சீர்திருத்தம் என்ற சொல், சமகால சமூகத்தின் தேவைகள் மற்றும் மதிப்புகளைப் பிரதிபலிக்கும் வகையில் ஒரு நாட்டின் பொதுப் பள்ளி முறையைப் பாதிக்கும் கல்விச் சட்டம், தரநிலைகள், முறை மற்றும் கல்விக் கொள்கை திருத்துவதற்காகச் செய்யப்பட்ட குறிப்பிடத்தக்க, முறையான திருத்தங்களின் காலவரிசையைக் குறிக்கிறது.[1] 18 ஆம் நூற்றாண்டில், வீட்டிற்கு வந்துஆசிரியர்கள் கல்வி கற்பிக்கும் பாரம்பரியக் கல்வியானது முதன்மையாகப் பணக்காரக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஒரு சலுகையாக இருந்தது. கலைக்களஞ்சியம், பொது நூலகங்கள் மற்றும் இலக்கணப் பள்ளிகள் போன்ற புதுமைகள் அனைத்தும் பாரம்பரியக் கல்வி மாதிரியின் செலவுகளுடன் தொடர்புடைய சில நிதிச் சுமைகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தன. விக்டோரியன் சகாப்தத்தின் உந்துதல்கள் சுய முன்னேற்றத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தின. இலத்தீன், கலை மற்றும் வரலாறு போன்ற பாரம்பரியத் தாராளவாத கலைப் பாடங்களைக் காட்டிலும் நவீன மொழிகள் மற்றும் கணிதம் போன்ற வணிக ரீதியாக மதிப்புமிக்கத் தலைப்புகளைக் கற்பிப்பதில் விக்டோரியன் கல்வி கவனம் செலுத்தியது.

18-ஆம் நூற்றாண்டு

[தொகு]

குழந்தைக் கற்றல்

[தொகு]
ஜீன்-ஜாக் ரூசோ

குழந்தைக் கற்றல் இயக்கத்தின் தந்தை இழான் இழாக்கு உரூசோ, குழந்தை மையக் கற்றலினை வலியுறுத்தினார்.

எமிலி: ஆர், அன் எஜுகேசன் என்ற நூலில், ஒரு கற்பனையான புதிதாகப் பிறந்த குழந்தையின் கல்விக்கான கல்வித் திட்டத்தை வயதுவந்தோர் மூலம் அமைக்கிறது.

சீர்திருத்தத்திற்கு தடைகள்

[தொகு]

வண்ண அடிப்படையில் மாணவர்கள் எதிர்கொள்ளும் கல்வி ஏற்றத்தாழ்வுகள்

[தொகு]

கல்விச் சீர்திருத்தத்தில் கருத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு காரணி சமத்துவம் மற்றும் அணுகல் ஆகும். அமெரிக்காவில் கல்வி தொடர்பான சமகாலப் பிரச்சினைகள், பல்வேறு சமூகக் குழுக்களில் கல்வி அடைவதற்கான விளைவுகளுடன் வரும் ஏற்றத்தாழ்வுகளின் வரலாற்றை எதிர்கொள்கின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Education Reform Movement | Encyclopedia.com". www.encyclopedia.com. பார்க்கப்பட்ட நாள் 2021-04-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்விச்_சீர்திருத்தம்&oldid=4080054" இலிருந்து மீள்விக்கப்பட்டது