உள்ளடக்கத்துக்குச் செல்

கல்லுக் கொடுத்தான் கல்லே வா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொத்தியாள் மறைமுகமாகக் கல்லுக் கொடுத்தல்

கல்லுக் கொடுத்தான் கல்லே வா என்னும் விளையாட்டு தமிழகத்தில் நாட்டுப்புறச் சிறுவர் சிறுமியர் ஆடிய குழு விளையாட்டுகளில் ஒன்று. அண்மைக் காலமாக இது மறைந்துவருகிறது.

ஆட்ட விவரம்

[தொகு]

ஒருவர் பொத்தியாள். (பொதுவானவர்). இவர் தன் கையிலுள்ள மணியாங்கல்லை மற்றவருக்குக் காட்டுவார். மற்றவர்கள் அவர்முன் பிறைபோல் வளைவாக நிற்பர்.

”கல்லுக் கொடுத்தான் கல்லே வா” என்று பாடிக்கொண்டு ஒவ்வொருவர் கையிலும் கல்லைக் கொடுப்பதுபோல் நடிப்பார். அனைவரும் தன் கையில் கல் உள்ளது போல் கையை மூடிக்கொண்டு நடிப்பர். ஒருவரிடம் உண்மையாகவே கல் கொடுக்கப்படும்.

”கல்லைக் கொண்டு ஓடிப்போ” என்று பொத்தியாள் இறுதியில் பாடியதும் கல்லைக் கையில் வைத்திருப்பவர் ஓடி முன்பே தீர்மானிக்கப்பட்ட உத்தி இடத்தைத் தொடவேண்டும். உத்தி இடத்தை அவர் அடைவதற்கு முன் பிறர் அவரைத் தொட முனைவர். கல் வைத்திருப்பவர் இடையில் தொடப்பட்டுவிட்டால், ஆட்டம் முனபு போல் மீண்டும் ஆடப்படும்.

கல் வைத்திருப்பவர் பிறரிடம் பிடிபடாமல் உத்தியைத் தொட்டுவிட்டால், ஏனையோரில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவர்மேல் குதிரை ஏறிக்கொண்டு பொத்தியாள் இருக்குமிடம் வரையில் சவாரி செய்யலாம். பொதுவாகத் தோற்றவருக்குத் தண்டனை என்னும் நிலை மாறி, இந்த விளையாட்டில் வென்றவருக்கு விருது வழங்கப்படுகிறது.

மேலும் பார்க்க

[தொகு]

கருவிநூல்

[தொகு]
  • இரா. பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1980