கல்லீரல் மீளுருவாக்கம்
கல்லீரல் மீளுருவாக்கம் என்பது கல்லீரல் தான் இழந்த இழையங்களை புதிய இழையங்களால் இடமாற்ற, இருக்கும் இழையங்களை வளர்த்தும் நிகழ்வாகும். மனிதனின் உடலில் மீளுருவாகும் ஆற்றல் கொண்ட ஒரே உள்ளுறுப்பு கல்லீரல் ஆகும். [1] [2]
காரணிகள்
[தொகு]கல்லீரல் ஏதேனும் நேர்ச்சியினால் பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்பிருக்கிறது. நச்சுப் பொருட்களை வடிகட்டும் பணியை அது மேற்கொள்வதால் நச்சுத்தன்மை எல்லைமீறி கல்லீரல் இயக்கத்தோல்வி அடைவதற்கும் வாய்ப்புள்ளது. [3]
மீளுருவாக்க ஆற்றல்
[தொகு]கல்லீரலில் காணப்படும் ஒருவகை குருத்தணுக்களே அதன் மீளுருவாக்க ஆற்றலுக்கு காரணம். [4] ஆனாலும் இது உண்மையான மீளுருவாக்கம் இல்லை, ஈடுசெய் வளர்ச்சி மட்டுமே என்ற கருத்தும் நிலவுகின்றது[5]. பாதிக்கு பாதி அறுபட்ட கல்லீரலால் கூட ஒரு குறிப்பிட்ட நேரத்தில் முழுமையாக தன்னை வளர்த்திக் கொண்டு பழையபடி இயங்க முடியும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. [6]ஆனால், பாலூட்டிகளின் கல்லீரலில் மீளுருவாக்கம் நடைபெறுகிற போதிலும், முழுமையான நிறை மட்டுமே மீளுருவாக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதன் வடிவம் மீளுவாக்கப்படாது. [7] எனினும் மீன்கள் உள்ளிட்ட எளிமை உயிரிகளில் கல்லீரல் தன் நிறையையும் வடிவத்தையும் மீளுருவாக்கிக் கொள்வதாக அறியப்படுகிறது. [8]
மாற்றறுவை சிகிச்சை
[தொகு]கல்லீரல் மாற்றறுவை சிகிச்சையின் போது கல்லீரல் தானம் அளிப்பவரின் உடலில் இருந்து கல்லீரல் அறுக்கப்பட்டு பெறுபவரின் உடலில் பொருத்தப்படுகிறது. இவ்வகை அறுவை சிகிச்சைக்கு உதவும் வகையில் கல்லீரல் குருத்தணுவைப் பயன்படுத்தும் பல ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. [9][10]
தொன்மவியல் குறிப்புகள்
[தொகு]கிரேக்கத் தொன்மவியலில் பிரொமீத்தியசு என்பவரும் தித்தியோசு என்பவரும் கடவுளின் கட்டளையை மீறியதற்காக, இரவில் பறவைகளால் அவர்களின் கல்லீரல் உண்ணப்பட்டு பகலில் அது மீண்டு வளர்ந்து மீண்டும் இரவில் உண்ணப்படும் என்பதாகிய கொடூரத் தண்டனையை அனுபவித்ததாக கட்டுக்கதைகள் கூறப்படுகின்றன.
மேற்கோள்
[தொகு]- ↑ Michalopoulos GK (2013). "Principles of Liver Regeneration and Growth Homeostasis". Comprehensive Physiology. Vol. 3. pp. 485–513. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/cphy.c120014. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-65071-4. PMID 23720294.
- ↑ "Liver regeneration". Science 276 (5309): 60–6. April 1997. doi:10.1126/science.276.5309.60. பப்மெட்:9082986.
- ↑ "Tissue repair: an important determinant of final outcome of toxicant-induced injury". Toxicologic Pathology 33 (1): 41–51. 2005. doi:10.1080/01926230590881808. பப்மெட்:15805055.
- ↑ "Where do we get Adult Stem Cells?". Boston Children's Hospital. பார்க்கப்பட்ட நாள் சூன் 18, 2013.
- ↑ Robbins and Cotran Pathologic Basis of Disease (7th ed.). 1999. p. 101. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8089-2302-1.
- ↑ "New school in liver development: lessons from zebrafish". Hepatology 50 (5): 1656–63. November 2009. doi:10.1002/hep.23157. பப்மெட்:19693947.
- ↑ "Liver regeneration". Journal of Hepatology 32 (1 Suppl): 19–31. 2000. doi:10.1016/S0168-8278(00)80412-2. பப்மெட்:10728791.
- ↑ "New school in liver development: lessons from zebrafish". Hepatology 50 (5): 1656–63. November 2009. doi:10.1002/hep.23157. பப்மெட்:19693947.
- ↑ "Liver Stem Cells Grown in Culture, Transplanted With Demonstrated Therapeutic Benefit". Science Daily. pp. Feb, 25. 2013. பார்க்கப்பட்ட நாள் சூன் 18, 2013.
- ↑ Alison MR, Islam S, Lim S. ". Stem cells in liver regeneration, fibrosis and cancer: the good, the bad and the ugly". J Pathol. 217(2). Centre for Diabetes and Metabolic Medicine, St Bartholomew's Hospital and the London School of Medicine and Dentistry, London, UK. m.alison@qmul.ac.uk. pp. 282–98. பார்க்கப்பட்ட நாள் சூன் 18, 2013.
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link)