கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம்
கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம் என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கீழக்கரை கிராமத்தில் ஜல்லிகட்டு என்னும் ஏறுதழுவலுக்காக கட்டப்பட்ட மிகப்பெரிய அரங்கமாகும்.[1]
வரலாறு
[தொகு]கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம் 61 கோடியே 78 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது.[2] இந்த அரங்கமானது 2024 சனவரி 24 அன்று தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது.[3] அன்றே அங்கு முதல் ஏறுதழுவுதல் போட்டியும் நடத்தப்பட்டது. அதில் நடந்த ஆறு சுற்றுகளில் மொத்தம் 478 காளைகளும், 250 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டனர். முதலிடத்தைப் பெற்ற காளைக்கும், வீரருக்கும் தார் ஜீப்பும் ஒரு இலட்சம் பரிசுப் பணமும் வழங்கப்பட்டன. இரண்டாம் இடம்பெற்ற காளைக்கும், வீரருக்கும் தலா ஒரு இருசக்கர வாகனமும் 75 ஆயிரம் பரிசுப் பணமும் வழங்கப்பட்டன. மூன்றாம் இடம் பிடித்த வீரருக்கும், காளைக்கும் தலா 50 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. வெற்றிபெற்ற பிற காளைகளுக்கும், வீரர்களுக்கும் தங்கம், வெள்ளி நாணயங்கள் போன்றவை பரிசாக வழங்கப்பட்டன.[4]
உள்கட்டமைப்புகள்
[தொகு]இங்கு சல்லிக்கட்டு அரங்கம், கால்நடை மருந்தகம், ஒலி ஒளி காட்சிக்கூடம், அருங்காட்சியகம், அருங்காட்சியகத்துடன் இணைந்த ஒரு சிறு நூலகம் ஆகியவற்றை்க் கொண்ட கட்டுமானமாக 83,462 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. சல்லிக்கட்டு அரங்கத்தில் ஒரே நேரத்தில் 5000 பேர்வரை அமர்ந்து பார்க்கத்தக்கதாக மூன்றடுக்கு பார்வையாளர் மாடத்தைக் கொண்டுள்ளது.[5] இங்கு உள்ள நூலகமானது கால்நடைகளை மையமாக கொண்ட கருப்பொருள் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஏறுதழுவுதல், கால்நடைகள், கால்நடை வளர்ப்பு, கால்நடை நோய்கள், விலங்குகள் பராமரிப்பு, கால்நடைகளை மையமாக கொண்ட இலக்கிய நூல்கள், ஓலைச் சுவடிகள் என கால்நடைகள் தொடர்புடைய அரிய நூல்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானம்... இனி கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம்!".
{{cite magazine}}
: Cite magazine requires|magazine=
(help) - ↑ WebDesk. "கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம் இன்று திறப்பு: மாடுபிடி வீரர்களுக்கு வியக்க வைக்கும் பரிசுகள் வழங்க திட்டம்".
{{cite magazine}}
: Cite magazine requires|magazine=
(help) - ↑ Bharat, E. T. V. (2024-01-23). "கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் திறப்பு விழாவை முன்னிட்டு களைகட்டிய கலை நிகழ்ச்சிகள்!".
{{cite magazine}}
: Cite magazine requires|magazine=
(help) - ↑ "மதுரை அருகே கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கில் முதன் முதலாக ஜல்லிக்கட்டு". 2024-01-25.
{{cite magazine}}
: Cite magazine requires|magazine=
(help) - ↑ "உலகின் முதல் ஏறுதழுவுதல் அரங்கம் - மதுரையில் இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.! - News7 Tamil" (in அமெரிக்க ஆங்கிலம்). 2024-01-24.
{{cite magazine}}
: Cite magazine requires|magazine=
(help) - ↑ "கால்நடைகள் சார் நூலகம்: இந்திய அளவில் முன்னோடி முயற்சி". 2024-02-11.
{{cite magazine}}
: Cite magazine requires|magazine=
(help)