உள்ளடக்கத்துக்குச் செல்

கலிபோர்னியம்(III) அயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலிபோர்னியம்(III) அயோடைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
கலிபோர்னியம் மூவயோடைடு[1]
இனங்காட்டிகள்
20758-81-0
InChI
  • InChI=1S/Cf.3HI/h;3*1H/q+3;;;/p-3
    Key: SJKPTAUDVXCUTB-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
  • [Cf+3].[I-].[I-].[I-]
பண்புகள்
CfI3
வாய்ப்பாட்டு எடை 631.71 g·mol−1
தோற்றம் ஆரஞ்சுச்சிவப்பு திண்மம்
அடர்த்தி கி/செ.மீ3
கொதிநிலை 800 °C (1,470 °F; 1,070 K)
கரையாது
கட்டமைப்பு
படிக அமைப்பு முக்கோணம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

கலிபோர்னியம்(III) அயோடைடு (Californium(III) iodide) CfI3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். ஓர் இருமக் கனிமச் சேர்மமாக கலிபோர்னியம்(III) அயோடைடு வகைப்படுத்தப்படுகிறது.[2][3]

தயாரிப்பு[தொகு]

கலிபோர்னியம் மூவயோடைடை அதிக வெற்றிடத்தின் கீழ் நுண்ணியகிராம் அளவுகளில் தயாரிக்கலாம். கலிபோர்னியம்(III) ஐதராக்சைடுடன் ஐதரசன் அயோடைடு சேர்த்து 500 °செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்தால் கலிபோர்னியம்(III) அயோடைடு உருவாகிறது:

Cf(OH)3 + 3HI → CfI3 + 3H2O

இயற்பியல் பண்புகள்[தொகு]

கலிபோர்னியம்(III) அயோடைடு ஆரஞ்சு சிவப்பு நிறத்தில் ஒரு திண்மமாக உருவாகிறது. ~800 ° செல்சியசு வெப்பநிலையில் உருகாமல் நேரடியாக பதங்கமாகிறது. இடக்குழு R3 (No. 148) உடன் a = 758.7 பைக்கோமீட்டர் மற்றும் c = 2081.4 பைக்கோமீட்டர் என்ற அணிக்கோவை அளவுருக்களுடன் ஓர் அலகுக்கு ஆறு வாய்ப்பாட்டு அலகுகள் என்ற முறையில் முக்கோணப் படிகத் திட்டத்தில் இது படிகமாகிறது. கலிபோர்னியம்(III) அயோடைடின் படிக அமைப்பு பிசுமத்(III) அயோடைடின் படிக அமைப்பிற்குச் சமமானதாக காணப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "WebElements Periodic Table » Californium » californium triiodide". webelements.com. பார்க்கப்பட்ட நாள் 11 April 2023.
  2. பாண்டியர் செப்பேடுகள் பத்துMacintyre, Jane E. (23 July 1992). Dictionary of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 2826. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-30120-9. பார்க்கப்பட்ட நாள் 11 April 2023.
  3. பாண்டியர் செப்பேடுகள் பத்துERDA Energy Research Abstracts (in ஆங்கிலம்). ERDA Technical Information Center, etc.; Washington. 1977. p. 565. பார்க்கப்பட்ட நாள் 11 April 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலிபோர்னியம்(III)_அயோடைடு&oldid=3739144" இலிருந்து மீள்விக்கப்பட்டது