உள்ளடக்கத்துக்குச் செல்

கலப்புப் பொருளாதாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கலப்புப் பொருளாதாரம் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட பொருளாதார முறைகளின் அம்சங்களை உள்ளடக்கிய ஒரு பொருளாதார முறை ஆகும். பொதுவாக இது, தனியுடைமை மற்றும் அரசுடைமை நிறுவனங்கள் இரண்டையும் கொண்ட அல்லது முதலாளித்துவம், சோசலிசம் ஆகிய இரண்டினதும் கூறுகளைக்கொண்ட அல்லது சந்தைப் பொருளாதாரம், திட்டமிட்ட பொருளாதாரம் இரண்டினதும் கலப்பாக அமைந்த ஒரு பொருளாதாரம் ஆகும்.[1][2][3]

கலப்புப் பொருளாதாரம் என்பதற்கு "ஒரு" வரைவிலக்கணம் கூறமுடியாது. ஆனால் கலப்புப் பொருளாதாரத்தோடு தொடர்புடைய அம்சங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிட முடியும்: மையப்படுத்தப்பட்ட பொருளாதாரத் திட்டமிடலுடன் கூடிய ஓரளவு தனியார் பொருளியல் சுதந்திரம். இப் பொருளாதாரத் திட்டமிடல், சூழலியம், சமுதாய நலம் தொடர்பான தலையீடு ஆகவோ, சில உற்பத்திச் சாதனங்களை அரச உடைமையாக வைத்திருத்தல் என்பவற்றை உள்ளடக்கலாம்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Gorman, Tom. The Complete Idiot's Guide to Economics, Alpha Books (2003), p. 9. "In a market economy, the private-sector businesses and consumers decide what they will produce and purchase, with little government intervention. ... In a command economy, also known as a planned economy, the government largely determines what is produced and in what amounts. In a mixed economy, both market forces and government decisions determine which goods and services are produced and how they are distributed."
  2. Schiller, Bradley. The Micro Economy Today, McGraw-Hill/Irwin, 2010, p. 15. "Mixed economy - An economy that uses both market signals and government directives to allocate goods and resources." This follows immediately from a discussion on command economies and market mechanism.
  3. Stilwell, Frank J. B. (2006). Political Economy: The Contest of Economic Ideas (2 ed.). Oxford University Press. ISBN 9780195551273. Retrieved 12 November 2018.[need quotation to verify]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலப்புப்_பொருளாதாரம்&oldid=4165059" இலிருந்து மீள்விக்கப்பட்டது