உள்ளடக்கத்துக்குச் செல்

கற்பகம் பொறியியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கற்பகம் பொறியியல் கல்லூரி
குறிக்கோள்Rediscover-Refine-Redefine
நிறுவப்பட்டது2000
வகைPrivate (தன்னாட்சி)
கல்லூரி முதல்வர்Dr. விஜய் குமார்
அமைவுகோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
வளாகம்அரைநகர்ப்புறம்
விளையாட்டு விளிப்பெயர்KCE
இணைப்புகள்அண்ணா பல்கலைக்கழகம்
இணையதளம்kce.ac.in

கற்பகம் பொறியியல் கல்லூரி (Karpagam College of Engineering) என்பது 2000 ஆம் ஆண்டில் கற்பகம் அறக்கட்டளையால் நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சி கல்வி நிறுவனம் ஆகும். இந்த கல்லூரி கற்பகம் கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். இது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.   மேலும் இது என்.பி.ஏ, டிசிஎஸ், மைக்ரோசாப்ட், விப்ரோ ஆகியவற்றால் அங்கீகாரம் பெற்றது.   இக்கல்லூரியில் ஒன்பது இளநிலை படிப்புகளும், ஐந்து முதுநிலை படிப்புகளும் வழங்கப்படுகின்றன.

வரலாறு[தொகு]

கற்பகம் அறக்கட்டளையை 1989 இல் புகழ்பெற்ற தொழிலதிபர் டாக்டர் ஆர். வசந்த குமார் நிறுவினார். முதலில் இந்த அறக்கட்டளை 1995 ஆம் ஆண்டில் கற்பகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை நிறுவியது, பின்னர் 1998 இல் கற்பகம் பலதொழில்நுட்பக் கல்லூரியை நிறுவியது. பின்னர் 2000 இல் கற்பகம் பொறியியல் கல்லூரி தொடங்கப்பட்டது.

கற்பகம் பொறியியல் கல்லூரி 2007-2008 கல்வியாண்டில் அண்ணா பல்கலைக்கழகத்தால் தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்பட்டது.

இருப்பிடம்[தொகு]

10.8801 ° N, 77.0224 ° E.

இந்த வளாகமானது கோயமுத்தூரிலிருந்து 26 கிலோமீட்டர் தொலைவில், மயிலேறிப்பாளையம் கிராமம், ஒத்தக்கல் மண்டபம் அஞ்சல்   641032 என்ற பகுதியியல் உள்ளது.

கல்வி[தொகு]

வழங்கப்படும் பாடங்கள்[தொகு]

இளநிலை பாடங்கள்[தொகு]

  • பி.இ. இயந்திரப் பொறியியல்
  • பி.இ. ஊர்திப் பொறியியல்
  • பி.இ. குடிசார் பொறியியல்
  • பி.இ. கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
  • பி.இ. மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல்
  • பி.இ. மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல்
  • பி.இ. மின் மற்றும் மின்னணு பொறியியல்
  • பி.இ. மின்னணுவியல் மற்றும் கருவி பொறியியல்
  • பி.டெக் தகவல் தொழில்நுட்பம்

முதுநிலை படிப்புகள்[தொகு]

  • எம்பிஏ - முதுநிலை வணிக மேலாண்மை
  • எம்.சி.ஏ - முதுநிலை கணினி பயன்பாடு
  • எம்.இ. தொடர்பியல் அமைப்புகள்
  • எம்.இ. பேரளவு ஒருங்கிணைச் சுற்று வடிவமைப்பு
  • எம்.இ. இயந்திரப் பொறியியல்

வெளி இணைப்புகள்[தொகு]