கர்பி ஆங்லாங் பீடபூமி
Appearance
கர்பி ஆங்லாங் பீடபூமி | |
---|---|
பரிமாணங்கள் | |
பரப்பளவு | 7,000 கிமீ2 (2,700 சதுரமைல்)[1] |
பெயரிடுதல் | |
சொற்பிறப்பு | கர்பி ஆங்கலாங்கு மாவட்டம் |
புவியியல் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | அசாம் |
மாவட்டம் | கர்பி ஆங்கலாங்கு மாவட்டம் |
கர்பி ஆங்லாங் பீடபூமி (Karbi Anglong plateau) என்பது இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் உள்ள இந்திய தீபகற்ப பீடபூமியின் விரிவாக்கமாகும். ஆண்டுதோறும் சூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு கோடைப் பருவமழையிலிருந்து இந்தப் பகுதி அதிகபட்ச மழையைப் பெறுகிறது.
புவியியல்
[தொகு]பீடபூமியின் சராசரி உயரம் 300 மீட்டர் (984 அடி) முதல் 400 மீட்டர் (1,312 அடி) வரை மாறுபடும்.[2] கர்பி ஆங்லாங் பீடபூமி பேரிக்காய் வடிவமானது. இது சுமார் 7000 கிமீ2 பரப்பளவைக் கொண்டுள்ளது.[1] இது மேகாலயா பீடபூமியுடன் தெற்கே குறைந்த சீரற்ற நிலப்பரப்பு வழியாக இணைகிறது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 https://www.northeastindiainfo.com/2020/05/karbianglong-plateau.html Karbi ANglong Plateau
- ↑ Vasudevan, Hari; et al. (2006). "Structure and Physiography". India:Physical Environment. New Delhi: NCERT. p. 17. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7450-538-5.
- ↑ Saikia, Partha. "Karbi Plateau Region of India". North East India Info.
{{cite web}}
: CS1 maint: url-status (link)