கரைத்துப் பிரித்தல்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கரைத்துப் பிரித்தல் என்பது ஒன்றுக்கும் மேற்பட்ட வேதிப்பொருட்களின் கரைசலில் இருந்து நமக்குத் தேவையான ஒரு பொருளை மட்டும் பிரித்தெடுக்கும் முறையாகும். அங்ஙனம் பிரித்தெடுக்க அப்பொருளை மிகுதியாய்க் கரைக்கக் கூடிய ஒரு கரைப்பான் பயன்படுத்தப்படுகிறது. அந்தக் கரைப்பான் நமக்குத் தேவையான அப்பொருளை மட்டும் கரைப்பதாக அமையவேண்டுமேயன்றி, வேறெந்த பொருளையும் அக்கரைசலில் இருந்து அப்புறப்படுத்தக்கூடாது.
இங்ஙனம் கரைக்கப்பட்ட அந்தப் பொருளை பின்னர் காய்ச்சி வடித்தல் மூலம் பிரித்தெடுத்து தூய்மையாக்கிக் கொள்ளலாம். நேரடியாக காய்ச்சி வடித்தல் மூலம் பிரிக்க இயலாவண்ணம் கொதிநிலை வெப்பம் ஒரே அளவில் இருக்கக்கூடிய இருவேறு நீர்மப் பொருட்களைப் பிரித்தெடுக்க இம்முறை பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. எனவே, நாம் பிரித்தெடுக்கப் பயன்படுத்தப்படும் கரைப்பானின் கொதிநிலையானது, அது கரைத்துக் கொண்டு வெளியேறும் கரைபொருளின் கொதிநிலையை விட மிகுந்தோ, குறைந்தோ இருத்தல் இன்றியமையாதது.