கரேன் சர்க்சியன் (சமூகவியலாளர்)
கரேன் சர்க்சியன் (Karen Sargsyan) ஆர்மீனிய நாட்டைச் சேர்ந்த ஒரு சமூகவியலாளர் ஆவார். 2023 ஆம் ஆண்டு முதல் இவர் ஆர்மீனிய யூரோ-அட்லாண்டிக் மையத்தின் தலைவராக பணியாற்றுகிறார்.[1][2][3] 1977 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் தேதியன்று கரேன் சர்க்சியன் பிறந்தார்.
தொழில் மற்றும் கல்வி
[தொகு]2017 ஆம் ஆண்டு முதல், சர்க்சியன் ஆர்மீனியாவின் புள்ளிவிவரக் குழுவின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைவராக பணியாற்றினார்.[4] 2014 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளூக்கு இடையில், சர்க்சியன் யெரெவனில் உள்ள மால்டா மற்றும் ஆர்மீனியா தூதரகத்தில் பணியாற்றினார். யெரெவன் மாநில பல்கலைக்கழகத்தில் இவர் சமூகவியலில் பட்டயம் பெற்றார்.
ஆர்மீனியா, காகசசு பகுதி மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் தற்போதைய நிகழ்வுகள் தொடர்பான அரசியல் வர்ணனை மற்றும் பகுப்பாய்வுகளை சர்க்சியன் அடிக்கடி முன்வைக்கிறார்.[5][6][7][8][9] ஆர்மீனியாவின் மீது உருசியாவின் செல்வாக்கையும் சர்க்சியன் விமர்சிக்கிறார் மற்றும் கூட்டு பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பு உட்பட்ட உருசிய தலைமையிலான அமைப்புகளில் ஆர்மீனியா உறுப்பினராக இருப்பதையும் எதிர்க்கிறார்.[10] ஆர்மீனியாவின் ஐரோப்பிய ஒருங்கிணைப்பையும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நாட்டின் அரசியல் மற்றும் பாதுகாப்பு சீரமைப்பையும் இவர் ஆதரிக்கிறார்.[11][12]
2018 ஆர்மீனிய நாடாளுமன்றத் தேர்தல்
[தொகு]சர்க்சியன் 2018 ஆர்மீனிய நாடாளுமன்றத் தேர்தலில் வீ கூட்டணியின் உறுப்பினராகப் பங்கேற்றார். இவர் தலைமையிலான கூட்டணி மக்கள் வாக்குகளில் வெறும் 2% மட்டுமே பெற்றது, இதனால் தேசிய சட்டமன்றத்தில் எந்த பிரதிநிதித்துவத்தையும் பெற முடியவில்லை.[13]
2023 யெரெவன் நகரத் தந்தை வேட்பாளர்
[தொகு]2023 ஆம் ஆண்டு சூன் மாதம் 21 ஆம் தேதியன்று 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கும் யெரெவன் நகர சபைத் தேர்தல்களில் யெரெவனின் நகரத் தந்தை வேட்பாளராக சர்க்சியன் கண்ணியமான யெரெவன் அரசியல் கூட்டணியால் பரிந்துரைக்கப்பட்டார் [14] ஆர்மீனியாவின் ஐரோப்பியக் கட்சியும் சமூக ஜனநாயகக் கட்சியான அன்சாக்கியன் கட்சியும் கூட்டாக இணைந்து சர்க்சியனை வேட்பாளராகப் பரிந்துரைத்தன.[14]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]ஆர்மீனிய மொழியுடன் கூடுதலாக, இவர் ஆங்கிலம், உருசிய மற்றும் செருமனிய மொழிகளை இவர் பேசுகிறார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ամեն ինչ ստեղծվում է ներքին ապստամբության համար․ Կարեն Սարգսյան. «Ա1+»".
- ↑ "Բաց հարթակ. հարցազրույց Կարեն Սարգսյանի հետ". www.1lurer.am.
- ↑ TV, Azat (June 18, 2022). "Քեզ թվում է, որ չես ներկայացնում այս նյութը ուրեմն Հայաստանում չեն իմանում. Կարեն Սարգսյանը՝ Քերոբյանին". Your Site NAME Goes HERE.
- ↑ "Կարեն Սարգսյան. Ամբողջ տնտեսությունը պետք է ծառայի ռազմարդյունաբերությանը. «Հայաստանի Հանրապետություն»".
- ↑ Technologies, Peyotto. "Ապագա քաղաքական էլիտայի ձևավորման գործընթաց է․ Սոցիոլոգը՝ դասադուլի մասին (տեսանյութ)".
- ↑ "Ուկրաինան չի դատապարտել Ադրբեջանի սեպտեմբերյան հարձակումը Հայաստանի վրա. սոցիոլոգը սխալվում է". February 27, 2023.
- ↑ "Իշխանության սասանումն է խնդիրը, ԼՂ-ն չէ․ Կարեն Սարգսյան․ Factor.am". Civic.
- ↑ "Կարեն Սարգսյան. «Երբ պայքարը քաղաքացիական է, հաճախ դիմություն-ընդդիմություն սահմանը ջնջվում է»". past.am. June 29, 2023.
- ↑ "Ինչո՞ւ են միայն ասում՝ Արցախն Ադրբեջանի կազմում չի լինելու, բայց մնացած տարբերակները հանված են խաղից, չեն նշվում | Լրագիր". Archived from the original on 2023-06-28. பார்க்கப்பட்ட நாள் 2023-06-29.
- ↑ "ՀԱՊԿ-ն վաղուց դադարել է գոյություն ունենալուց․ Կարեն Սարգսյան". oragir.news.
- ↑ "ԵՄ-ն ցուցադրում է տարածաշրջանի այլ երկրներին, որ Հայաստանը եվրոպական անվտանգության մի մաս է․սոցիոլոգ․ տեսանյութ". February 23, 2023.
- ↑ "Հայաստանի քաղաքական և քաղաքացիական ուժերի հայտարարությունը երկրի ինքնիշխանության, քաղաքակրթական ընտրության և անվտանգային..." Hetq.am. September 18, 2022.
- ↑ "ՄԵՆՔ Դաշինքի համամասնական ցուցակն ամբողջությամբ". A1Plus. June 28, 2023.
- ↑ 14.0 14.1 "Սոցիոլոգ Կարեն Սարգսյանը՝ Երևանի քաղաքապետի թեկնածու | Ֆակտոր տեղեկատվական կենտրոն".