உள்ளடக்கத்துக்குச் செல்

கருவேப்பிலைப்பாளையம் தர்மராஜர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு தர்மராஜர் திரௌபதி கோவில்
பெயர்
வேறு பெயர்(கள்):அம்மன்கோவில், திரௌபதி கோவில்...
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:விழுப்புரம்
அமைவிடம்:வயல்வெளி, கருவேப்பிலைப்பாளையம்,திருவெண்ணெய்நல்லூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:உளுந்தூர்பேட்டை
மக்களவைத் தொகுதி:விழுப்புரம்
கோயில் தகவல்
மூலவர்:தர்மராஜர்
தாயார்:திரௌபதி தாயார்
சிறப்புத் திருவிழாக்கள்:சித்திரை திருவிழா 22 நாட்கள்
உற்சவர்:தர்மராஜர்
உற்சவர் தாயார்:திரௌபதி தாயார்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:தென்னிந்திய கட்டிடக்கலை
வரலாறு
கட்டிய நாள்:இருபதாம் நூற்றாண்டு ,1975 ஆம் ஆண்டு
அமைத்தவர்:மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது

கருவேப்பிலைப்பாளையம் தர்மராஜர் கோயில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், கருவேப்பிலைப்பாளையம் என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.[1]

== வரலாறு == விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் தாலுகா, கருவேப்பிலைப்பாளையம் கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த தர்மராஜ திரவுபதியம்மன் - மகா மாரியம்மன் கோவில் உள்ளது. துரியோதனனுக்கும்- பாண்டவர்களுக்கும் மகாபாரத போர் இங்கு நடந்ததாக ஐதீகம்.


இதனால் ஆண்டு தோறும் நடக்கும் திருவிழா காலங்களில் 19 நாட்கள் மகாபாரத சொற்பொழிவு நடக்கிறது.இக்கோவில் அமைந்த பகுதியில் திரவுபதியம்மன் தர்மர் பூச்சூடுதல், அரவான் பலி கொடுத்தல், பாண்டவர்கள் விளையாட்டுக்களில் மாடு விரட்டுதல், கோட்டை அழித்தல், பாஞ்சாலை கூந்தல் முடித்தல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடந்ததால் தர்மராஜ திரவுபதியம்மன் கோவில் இங்கு நிறுவப்பட்டதாக கூறப்படுகிறது. இக்கோவிலில் கிருஷ்ணரின் பத்து அவதாரங்கள் சிலைகளாக உள்ளது தனிச்சிறப்பாகும்.

பங்குனி மாதத்தில் கொடியேற்றி 23 வகைராக்களால் 23 நாட்கள் திருவிழாவும் முதல் நாள் கொடியேற்றத்துடன் தொடங்கி 10 ஆம் நாள் பகாசூரன் வதமும் 18 ஆம் நாள் தீமிதி விழாவும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது, புரட்டாசி 3 ஆம் சனிக்கிழமைகளில் பெருமாள் சுவாமிக்கு திதி ஆராதனை உற்சவமும், ஆடி திருவிழாவும் நடத்தப்பட்டு வருகிறது.....

கோயில் அமைப்பு

[தொகு]

இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

[தொகு]

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)