கருவூர்க் கலிங்கத்தார்
Appearance
கருவூர்க் கலிங்கத்தார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவர் கலிங்கத்திலிருந்து கருவூர் வந்து வாழ்ந்தவர்.[1] அவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது அகநானூறு 183 (பாலைத் திணை)
கலிங்கம் என்னும் சொல் ஆடையைக் குறிக்கும். எனவே இவர் துணி வாணிகம் செய்தவர் எனக் கொள்ளலாம். இவரது இயற்பெயர் தெரியவில்லை.
பாடல் தரும் செய்தி
[தொகு]தலைமகன் கூறிச் சென்ற பருவம் வந்துவிட்டது. தலைவன் திரும்பவில்லை. வாக்குத் தவறமாட்டார் என்றாயே, அவர் வரவில்லையே என்று தலைவி தோழியைக் கேட்பதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.
உவமை நலம்
[தொகு]யானைகள் கூட்டம் கூட்டமாக மேய்வது போல மழை மேகங்கள் வானத்தில் மேய்கின்றனவாம்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ கா., கோவிந்தன் (1964). சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை - கக. மாநகர்ப் புலவர்கள் -2. (மறுபதிப்பு) (PDF). திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட். p. 40.