உள்ளடக்கத்துக்குச் செல்

கருப்பை வாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருப்பை வாய்
பெண் உடற்கூற்றின் முன்பக்க வரைபடம்
இலத்தீன் cervix uteri
தமனி யோனித் தமனி, சூலகத் தமனி
முன்னோடி முல்லரின் குழல்
ம.பா.தலைப்பு Cervix+uteri

கருப்பை வாய் (Cervix), என்பது யோனியின் மேல்பகுதியுடன் இணையும் கருப்பையின் ஒடுங்கிய கீழ்ப்பகுதியாகும். இது யோனிப் பகுதியுடன் இணையும் கருப்பையின் கழுத்துப் பகுதி போன்று காணப்படும். இதன் அமைப்பு உருளையுருவானதாகவோ, கூம்புருவானதாகவோ இருப்பதுடன், யோனியின் மேல், முன் சுவரூடாக வெளிநீட்டப்பட்ட தோற்றத்தில் அமைந்திருக்கும். தகுந்த மருத்துவ உபகரணங்கள் மூலம் இதன் அரைவாசிப் பகுதியை இலகுவாகப் பார்க்கக் கூடியதாக இருக்கும். மாதவிலக்குக் கால நீர்மமும், விந்துக்களும் செல்லுமாறு இதில் துவாரம் உள்ளது.[1]

இழையவியல்

[தொகு]

கருப்பை வாயின் புறவணியிழையம் பல்வேறு பகுதிகளில் பல்வேறானது. வெளிகருப்பை வாய் (சேய்மையில், யோனியுடன் தொடர்புள்ள) நகமியமல்லாத அடுக்குகளான செதிள் புறவணியிழையமாகும். உள் கருப்பை வாய் (அண்மையில், கருப்பையினுள்) உள்ளது எளிய தூணுரு புறவணியிழையமாகும்.[2]

வெளி கருப்பைவாய்க்கும் உள் கருப்பை வாய்க்கும் இடைப்பட்டப் பகுதி நிலைமாற்ற வலயம் எனப்படும். இந்த வலயத்தில் உள்ள திசுக்கள் ஒருவரது இயல்பான வாழ்வு காலத்தில் பலமுறை திசு மாற்றமடைகின்றன. உள்கருப்பை வாய் யோனியின் அமிலத்தன்மைச் சூழலை எதிர்கொள்ளும்போது அதற்கேற்ப செதிள் புறவணியிழையமாக திசுமாற்றமடைகிறது. அதேபோல வெளிக்கருப்பை வாய் எளிய கருப்பை பகுதியில் தூணுரு புறவணியிழையமாக திசு மாற்றமடைகிறது.

நிலைமாற்ற வலயத்தில் வாழ்நாள் காலத்தில் நடைபெறும் திசு மாற்றங்கள்:

  • பருவமடைதல் போது உள் கருப்பை வாய் கருப்பைக்கு வெளியே வருகிறது
  • இயல்பான மாதவிலக்கு காலங்களில் கருப்பையின் மாற்றங்களுடன்
  • மாத விலக்கு நின்றபிறகு கருப்பை சுருங்கி நிலைமாற்ற வலயம் மேலேறுதல், இந்த மாற்றங்கள் அனைத்துமே இயல்பானவை மற்றும் உடற்செயலியல்படியானவை. இருப்பினும் நிலைமாற்ற வலயத்தில் ஏற்படும் திசுமாற்றங்கள் புற்றுநோய்க்கான வாய்ப்பை கூட்டுகின்றன. கருப்பைவாய் புற்றுநோய் பெரும்பாலும் இந்தப் பகுதியிலேயே உருவாகின்றன.

தூணுரு தோலியத்திசுவிலிருந்து செதிள் தோலியத்திசுவாக மாறுகின்ற இடைக்காலத்தில் கருப்பையின் சளி மாட்டிக்கொண்டு நீர்க்கட்டிகள் உருவாகின்றன. இவை நபோதியன் நீர்க்கட்டிகள் என்று அழைக்கப்படுகின்றன.[3]

நோய்கள்

[தொகு]

படிமங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
  • My Beautiful Cervix—மாதவிலக்கு காலத்தில் கருப்பை வாயின் நிலைகளை விவரிக்கும் ஒளிப்படத் தொகுதி கொண்ட வலைத்தளம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருப்பை_வாய்&oldid=4230846" இலிருந்து மீள்விக்கப்பட்டது