உள்ளடக்கத்துக்குச் செல்

கருந்தலைக் கொண்டைக் குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Rubigula|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
கருந்தலைக் கொண்டைக் குருவி
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Rubigula
இனம்:
இருசொற் பெயரீடு
Rubigula melanictera
(Gmelin, JF, 1789)
வேறு பெயர்கள்
  • Muscicapa melanictera J. F. Gmelin, 1789
  • Pycnonotus melanicterus
  • Rubigula melanictera

கருந்தலைக் கொண்டைக் குருவி ( Rubigula melanictera ), அல்லது கருந்தலை மஞ்சள் கொண்டைக் குருவி என்பது குருவி வரிசையைச் ஒரு பறவை ஆகும். இது கொண்டைக்குருவி குடும்பத்தைச் சேர்ந்தது. இது இலங்கையின் ஒரு அகணிய உயிரி ஆகும்.[2]

விளக்கம்

[தொகு]
இலங்கையின் சிகிரியாவில் ஒரு கருந்தலைக் கொண்டைக் குருவி.

கருந்தலைக் கொண்டைக் குருவி கொண்டையற்ற கருந்தலையோடு மஞ்சள் தொண்டையும், பழுப்பு கண்களையும் கொண்டது. இதன் மேல் பகுதி மஞ்சள் கலந்த பச்சையாகவும், அடிப்பகுதி மஞ்சளாகவும் இருக்கும். பழுப்பு நிறமான வால் வெள்ளை முனையுடன் முடிகிறது. ஆணுக்கு சிவப்பு விழிப்படலமும், பெண்ணுக்கு பழுப்பு நிற விழிப்படலமும் உள்ளன. இதன் அழைப்புகள் இனிமையான சீழ்க்கை போன்று இருக்கும். இனப்பெருக்க பதிவுகள் மார்ச் முதல் செப்டம்பர் வரை உள்ளன.

பரவலும் வாழ்விடமும்

[தொகு]

இது காடுகள் மற்றும் அடர்ந்த புதர்களில் வாழும் பறவை. இது புதரில் கூடு கட்டுகிறது. இரண்டு முதல் நான்கு முட்டைகளை இடும். கருந்தலைக் கொண்டைக் குருவி பழங்களையும், பூச்சிகளையும் உண்ணும். இது பொதுவாக இணையாக காணப்படும்.

பண்பாட்டில்

[தொகு]

இலங்கையில், சிங்கள மொழியில் இந்த பறவை හිස කලු කොන්ඩයා (Hisa kalu Kondaya) என அறியப்படுகிறது .

மேற்கோள்கள்

[தொகு]
  1. BirdLife International. (2016). "Rubigula melanictera (formerly as: Pycnonotus melanicterus)". IUCN Red List of Threatened Species 2016: e.T103825842A94339991. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T103825842A94339991.en. https://www.iucnredlist.org/species/103825842/94339991. 
  2. Warakagoda, Deepal (April 2009). "The Avifauna of Sri Lanka: An Overview of Current Status". Taprobanica 1 (1): 32. doi:10.4038/tapro.v1i1.2775. 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Rubigula melanictera
என்பதில் ஊடகங்கள் உள்ளன.