உள்ளடக்கத்துக்குச் செல்

கருட விஷ்ணு காஞ்சன பண்பாட்டுப் பூங்கா

ஆள்கூறுகள்: 8°48′36″S 115°10′05″E / 8.81°S 115.168°E / -8.81; 115.168
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருட விஷ்ணு காஞ்சனப் பண்பாட்டுப் பூங்கா
தமன் பௌத கருட விஷ்ணு காஞ்சனம்
23 மீட்டர் உயரம் கொண்ட கருடன் மீதமர்ந்த விஷ்ணு சிலை
கருட விஷ்ணு காஞ்சன பண்பாட்டுப் பூங்கா is located in இந்தோனேசியா
கருட விஷ்ணு காஞ்சன பண்பாட்டுப் பூங்கா
அமைவிடம்நெருரா ராய் பன்னாட்டு வானூர்தி நிலையம் அருகே
அண்மைய நகரம்உன்கசன், பதுங், பாலித்தீவு, இந்தோனேசியா
ஆள்கூறு8°48′36″S 115°10′05″E / 8.81°S 115.168°E / -8.81; 115.168
பரப்பளவு60 ஹெக்டேர்
ஏற்றம்263 மீட்டர்கள் (863 அடி)
நிர்வாகம்ஆலம் சூதேரே குழுமம்
திறந்துள்ள நேரம்காலை 8:00 - இரவு 10:00
இணையதளம்http://www.gwkbali.com
தாமரைக் குளம் பகுதி


கருட விஷ்ணு காஞ்சனப் பண்பாட்டுப் பூங்கா ('Garuda Wisnu Kencana Cultural Park) (இந்தோனேசிய மொழி: Taman Budaya Garuda Wisnu Kencana or GWK)', இந்தோனேசியாவின் பாலித் தீவில் பதுங் அருகே 60 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்த பண்பாட்டுப் பூங்காவாகும். இப்பூங்காவில் 23 மீட்டர் உயரத்தில் கருட வாகனத்தில் அமர்ந்த விஷ்ணு சிலை உள்ளது. [1][2]இங்குள்ள தாமரைக் குளம், புனித நீர் குழாய்களுடன் உள்ளது.

கருட விஷ்ணு சிற்பம்

[தொகு]

கருட விஷ்ணு சிற்பம் 75 m (246 அடி) உயரம், 65 m (213 அடி) அகலத்துடன் கூடியது.[3]21 அடுக்களுடன் கூடிய கருட விஷ்ணு சிற்பம் 4000 டன் எடையும், அடித்தளத்துடன் 121 m (397 அடி) உயரம் கொண்டது.

இந்த சிலை செம்பு மற்றும் பித்தளை தகடுகளால் ஆனது. இதன் உட்கட்டமைப்பு துருப்பிடிக்காத எஃகு சட்டகம் மற்றும் சிமிண்ட், கற்கள் மற்றும் மணல் கலவைகளைக் கொண்ட தூண் நெடுவரிசை தூண்களால் ஆனது. இச்சிற்பத்தின் வெளியுறை 22,000 m2 (240,000 sq ft) பரப்பளவைக் கொண்டுள்ளது. விஷ்ணுவின் கிரீடம் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. இந்த நினைவுச்சின்னம் 31 சூலை 2018 அன்று கட்டி முடிக்கப்பட்டது மற்றும் 22 செப்டம்பர் 2018 அன்று இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோ திறந்து வைத்தார்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Nuarta 'resurrects' tallest Wisnu statue". July 24, 2013. Archived from the original on July 24, 2013.
  2. "Success at last for Bali's tallest monument". August 18, 2013.
  3. "Meet the Designer of Garuda Wisnu Kencana : Nyoman Nuarta - NOW! Bali". NOW! Bali. 1 September 2018. பார்க்கப்பட்ட நாள் 25 September 2018.
  4. "Jokowi resmikan patunng GWK terwujud setelah 28 Tahun". Kompas. http://travel.kompas.com/read/2018/09/22/223035427/jokowi-resmikan-patung-gwk-terwujud-setelah-28-tahun.