உள்ளடக்கத்துக்குச் செல்

கராத்தே தியாகராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கராத்தே தியாகராஜன்
சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர் (மேயர்) பட்டியல் பெருநகர சென்னை மாநகராட்சி
பதவியில்
அக்டோபர் 2002 – அக்டோபர் 2005
முன்னையவர்மு. க. ஸ்டாலின்
பின்னவர்மா. சுப்பிரமணியம் (அரசியல்வாதி)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
கராத்தே தியாகராஜன்
தேசியம்இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு (1986-1996,1998-2001, 2006-2019)
பிற அரசியல்
தொடர்புகள்
தமிழ் மாநில காங்கிரசு (1996-1998), அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (2001-2005)

கராத்தே தியாகராஜன் (ஆங்கில மொழி: Karate R. Thiagarajan) என்பவர் தமிழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதி மற்றும் கராத்தே பயிற்சியாளராவார். இவர் அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் இருந்துள்ளார்.


கராத்தே பயிற்றுநராக இருந்து, பல லட்சம் நபர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளார். இவர் கராத்தே போட்டிகளில் இந்தியாவின் முன்னாள் வாகையராவார்.[1] இவர் அகில இந்திய கராத்தே கூட்டமைப்பின் தலைவராக இருந்து பின்னர் நிதி கையாடல் தொடர்பான சர்ச்சைகளை அடுத்து பதவி விலகினார்.[2] அதன்பிறகு இந்திய கராத்தே சங்கம் (கே.ஏ.ஐ) என்ற அமைப்பைத் தொடங்கி அதன் தலைவராகவும் உள்ளார்.[3]

அரசியல் வாழ்க்கை

[தொகு]

பெருநகர சென்னை மாநகராட்சியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளாட்சி உறுப்பினராகத் தேர்வானார். நகரத்தந்தை பதவியிலிருந்து மு. க. ஸ்டாலின் விலகிய பின்னர் 2002 முதல் 2005 வரை பொறுப்பு நகரத்தந்தையாகப் பதவி வகித்தார்.[4][5] 2001 இல் கருணாநிதி கைதிற்குக் காரணமான மேம்பாலங்கள் கட்டுமான புகாருக்குப் பின்னணியாக இருந்தவர்.[6] 2005 இல் ஊழல் முறைகேடு குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். ஆறு மாதக்கால தலைமறைவிற்குப் பின் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.[7][8] தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருக்கையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து 27 ஜூன் 2019 இல் நீக்கப்பட்டார்.[9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "`Karate' Thiagarajan's distinction". தி இந்து. https://www.thehindu.com/2005/09/15/stories/2005091512162000.htm. பார்த்த நாள்: 28 June 2019. 
  2. "Karate Thiagarajan dismissed for allegedly misappropriating funds". DNA news. 2 January 2010. பார்க்கப்பட்ட நாள் 6 May 2016.
  3. "Police raid leaves karate officials red- faced". யாகூ! செய்திகள். 21 September 2015. பார்க்கப்பட்ட நாள் 6 May 2016.
  4. "When civic sense got a headstart". Saptarshi Bhattacharya. தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 16 May 2012. பார்க்கப்பட்ட நாள் 6 May 2016.
  5. "DMK members evicted en masse". தி இந்து. 1 May 2003. பார்க்கப்பட்ட நாள் 6 May 2016.
  6. "Tamil Nadu: Corporation personnel face axe in flyover scam". Kenath Jayashankar Menon. Asian Tribune. 27 May 2005. பார்க்கப்பட்ட நாள் 6 May 2016.
  7. "Chennai Deputy Mayor expelled from AIADMK". டெக்கன் ஹெரால்டு. 15 October 2005. பார்க்கப்பட்ட நாள் 6 May 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
  8. "Thiagarajan joins Congress". The Hindu. 17 April 2006. பார்க்கப்பட்ட நாள் 6 May 2016.
  9. "காங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்.. பாய்ந்தது ஒழுங்கு நடவடிக்கை!". indianexpress.com. https://tamil.indianexpress.com/tamilnadu/karate-thiagarajan-suspends-from-congress-party/. பார்த்த நாள்: 28 June 2019. 
முன்னர் சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர்
(மேயர்)

2002-2006
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கராத்தே_தியாகராஜன்&oldid=3238457" இலிருந்து மீள்விக்கப்பட்டது