கரணங்கள்
Appearance
கரணங்கள் என்பது பரதநாட்டிய கலையின் ஒரு அலகு ஆகும். கரணம் என்ற சொல்லானது கிறு எனும் வடமொழி வழியே வந்ததாகும். இதற்கு முழுமையான செயல் என்று பொருள். இதனை சொக்கம் என்றும் சுத்த நிருத்தம் என்றும் அழைக்கின்றனர். [1]
தோற்றம்
[தொகு]தண்டு முனிவருக்கும், பரத முனிவருக்கும் சைவர்களின் முழுமுதற்கடவுளான சிவபெருமான் கரணங்களைக் கற்பித்தார் என்று நாட்டிய சாத்திரத்தின் நாலாவது அத்தியாயமான தாண்டவலட்சணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வகைகள்
[தொகு]தாலபுஷ்பபுடம் முதலாக கங்காவதரணம் வரை கரணங்களின் வகைகள் நூற்றியெட்டு என்று அறியப்பட்டுள்ளன. இவை நூற்றியெட்டு தாண்டவங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.