கரடிக்கல்
Appearance
கரடிக்கல் Karadikal | |
---|---|
ஆள்கூறுகள்: 9°53′06″N 77°58′41″E / 9.8849°N 77.9781°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | மதுரை மாவட்டம் |
ஏற்றம் | 192 m (630 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 625706[1] |
அருகிலுள்ள ஊர்கள் | மதுரை, திருமங்கலம், கப்பலூர், ஆஸ்டின்பட்டி, தனக்கன்குளம்,திருநகர் மற்றும் திருப்பரங்குன்றம் |
மாவட்ட ஆட்சித் தலைவர் | மா. சௌ. சங்கீதா, இ. ஆ. ப. |
மக்களவைத் தொகுதி | விருதுநகர் மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | திருமங்கலம் (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவை உறுப்பினர் | மாணிக்கம் தாகூர் |
சட்டமன்ற உறுப்பினர் | ஆர். பி. உதயகுமார் |
இணையதளம் | https://madurai.nic.in |
கரடிக்கல் (ஆங்கில மொழி: Karadikal) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 192 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கரடிக்கல் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 9°53′06″N 77°58′41″E / 9.8849°N 77.9781°E ஆகும். மதுரை, திருமங்கலம், கப்பலூர், ஆஸ்டின்பட்டி, தனக்கன்குளம், திருநகர் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகியவை கரடிக்கல் பகுதிக்கு அருகிலுள்ள சில முக்கியமான புறநகர்ப் பகுதிகளாகும்.
மதுரை மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு திருவிழா நடக்கும் பகுதிகளில் கரடிக்கல் பகுதியும் அடங்கும்.[2][3]
இங்குள்ள வடக்குவாசல் செல்லாயி அம்மன் கோயில்[4] மற்றும் சுந்தரராஜ பெருமாள் கோயில்[5][6] ஆகியவை தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "KARADIKAL Pin Code - 625706, Tirumangalam All Post Office Areas PIN Codes, Search MADURAI Post Office Address". news.abplive.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-24.
- ↑ "கரடிக்கல் கிராமத்தில் 278வது ஆண்டு ஜல்லிக்கட்டு விழா". தின பூமி. பார்க்கப்பட்ட நாள் 2023-07-24.
- ↑ Suresh K Jangir (2023-04-23). "திருமங்கலம் அருகே ஜல்லிக்கட்டு- சீறிப்பாய்ந்த காளைகளை போட்டிபோட்டு அடக்கிய வீரர்கள்". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-24.
- ↑ "Arulmigu Vadakuvai Selliamman Temple, Karadikal - 625514, Madurai District [TM033175].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-24.
- ↑ "கரடிக்கல் மலை மீது உள்ள சுந்தரராஜபெருமாள் கோயிலுக்கு படிக்கட்டு பக்தர்கள் எதிர்பார்ப்பு". Dinamalar. பார்க்கப்பட்ட நாள் 2023-07-24.
- ↑ "Arulmigu Perumal And Perumal Temple, Karadikal - 625706, Madurai District [TM033062].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-24.