உள்ளடக்கத்துக்குச் செல்

கம்புள் கோழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கம்புள் கோழி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
A. phoenicurus
இருசொற் பெயரீடு
Amaurornis phoenicurus
Pennant, 1769
தோராயமாக இப்பறவைகள் வாழும் பகுதிகள்.
வேறு பெயர்கள்

Erythra phoenicura

கம்புள் கோழி, சம்புக்கோழி அல்லது கானாங்கோழி (white-breasted waterhen, Amaurornis phoenicurus) என்பது நீர்க்கோழி இனப்பறவை ஆகும். இப்பறவை இந்தியத் துணைக்கண்டத்திலும், தெற்காசியா முழுக்கப் பரவலாகவும் காணப்படுகிறது. இப்பறவையின் உடல் சாம்பல் நிறத்தில் இருக்கும். ஆனால் முகமும், நெஞ்சும் வெண்மையாக இருக்கும். இப்பறவைகள் சதுப்பு நிலங்களில் கோரைகளை ஒட்டி குளம், குட்டைகளில் காணப்படும். இவை மற்ற நீர்க்கோழிகளை விட சற்றே துணிச்சலானவை. திறந்த சதுப்பு நிலங்களில் அல்லது பரபரப்பான சாலைகளுக்கு அருகில் உள்ள வடிகால்களில் வாலை நிமிர்த்துக்கொண்டு மெதுவாக அடியெடுத்து வைப்பதை அடிக்கடி காணலாம். இவை பெரும்பாலும் அமைதியானவை என்றாலும் இனப்பெருக்க காலத்தில், முதல் மழைக்குப் பிறகு, உரத்தக் குரலில் அடிக்கடி மீண்டும் மீண்டும் ஒலி எழுப்பம்.[2]

வாழ்விடம்

[தொகு]

இதன் இனப்பெருக்க வசிப்பிடங்கள் தென்இந்தியா, பிலிப்பீன்சு மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் பாக்கித்தான், மாலைதீவுகள், இந்தியா, வங்காளதேசம், மற்றும் இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து தெற்காசியா முழுவதும் உள்ளது. இவை சமவெளிப்பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன. ஆனால் கேரளாவிலும், நைனிடாலிலும் (1300 மீ) மற்றும் உயரமான மலைகளிலும் (1500 மீ) அறியப்படுகின்றன. இப்பறவைகள் குறுகிய தூரம் மட்டுமே பயணித்து புதிய இடங்களில் குடியேறுகின்றன. ராகடா என்னும் எரிமலை தீவில் முதன் முதலில் இப்பறவைகள் குடியேறி புதிய இடங்களை தோற்றுவித்தன. இவை பெரும்பாலும் நன்னீர் அருகே காணப்பட்டாலும், நன்னீர் கிடைக்காத போது உவர்ப்பான நீரிலும் காணப்படுகிறது.

இயல்பு மற்றும் சூழலியல்

[தொகு]

இந்த பறவைகள் நீர்நிலைகளின் விளிம்பில் முக்கியமாக நிலத்தில் தன் மேய்ச்சல் தேடும் பணியை மேற்கொள்வதால் பொதுவாக தனியாகவோ அல்லது இணையாகவோ காணப்படுகின்றன. குறைந்த நிலத்தினை வளர்ச்சி உள்ள நிலங்களில் சில சமயங்களில் ஏறுகின்ற வழக்கம் உடையது. இதன் வால் நடக்கும் போது மேல்நோக்கி நிற்கும் மற்றும் மெதுவாக குலுங்கும். இவை தங்கள் அலகினால் மண் மற்றும் நீரினை தோண்டி ஆராய்ந்து தனக்கு வேண்டிய உணவினை தேடும். மேலும் இவை உணவினை பார்வையால் தேடி எடுத்துக்கொள்ளும். இவை சில சமயங்களில் ஆழமான நீரில் காட்டுக்கோழி பறவை போல் இரை தேடி உண்ணும்.

இனப்பெருக்கக்காலம்

[தொகு]

இவற்றின் இனப்பெருக்கக் காலம் பெரும்பாலும் சூன் முதல் அக்டோபர் வரை இருக்கும் ஆனால் உள்நாட்டில் மாறுபடும். தரையில் உள்ள சதுப்பு தாழ்நிலத்தில் ஒரு உலர்ந்த இடத்தில் கூடு கட்டும். ஆறு முதல் ஏழு முட்டைகளை அதில் இடும். வளைந்த தன் வாய்ப்பகுதியை வைத்து உணவினை சிறிது சிறிதாக கடிக்கும். முட்டைகள் 19 நாட்களில் குஞ்சு பொரித்து விடும். ஆண் நீர்க்கோழி மற்றும் பெண் நீர்க்கோழி இரண்டும் சேர்ந்து முட்டைகளை அடைகாத்து குஞ்சுகளைப் பராமரிக்கும். எதிரிகளிடம் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக அடிக்கடி குஞ்சுகள் நீரில் மூழ்கி எழும். முழுவளர்ச்சி அடைந்த கோழி, அடைகாக்க ஓர் பறவைக்கூண்டு அமைத்துக்கொண்டு அதில் இளைப்பாறும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. BirdLife International (2016). "Amaurornis phoenicurus". IUCN Red List of Threatened Species 2016: e.T22692640A95217833. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22692640A95217833.en. https://www.iucnredlist.org/species/22692640/95217833. பார்த்த நாள்: 19 November 2021. 
  2. Boyes, S. (2012). "Top 25 Wild Bird Photographs of the Week #23". National Geographic Voices. National Geographic Society. பார்க்கப்பட்ட நாள் July 15, 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்புள்_கோழி&oldid=3764040" இலிருந்து மீள்விக்கப்பட்டது