கமிலா வெலேஜோ
கமிலா வெலேஜோ டவ்லிங் | |
---|---|
கமிலா வெலேஜோ (2012) | |
26 ஆவது மாவட்ட, நாடாளுமன்ற கீழ் அவை உறுப்பினர் | |
பதவியில் 11 மார்ச் 2014 | |
Succeeding | கசுடோவோ கசுபன் |
தலைவர் சிலி பல்கலைக் கழக மாணவர் சங்கம் | |
பதவியில் 24 நவம்பர் 2010 – 16 நவம்பர் 2011 | |
முன்னையவர் | சூலியோ சர்மியன்டோ |
பின்னவர் | கேப்ரியல் போரிக் |
உறுப்பினர் சிலி இளைஞர் கம்யூனிஸ்ட் மத்தியகுழு | |
பதவியில் அக்டோபர் 2011 – தற்போது | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 100px 28 ஏப்ரல் 1988 லா ப்ளோரிடா, சிலி |
இறப்பு | 100px thumb |
இளைப்பாறுமிடம் | 100px thumb |
தேசியம் | சிலி |
அரசியல் கட்சி | சிலி இளைஞர் கம்யூனிஸ்ட் |
பெற்றோர் |
|
வாழிடம்s | லா ப்ளோரிடா, சிலி |
முன்னாள் கல்லூரி | சிலி பல்கலைக்கழகம் |
தொழில் | புவியியல் |
கமிலா அண்டோனியா அமரந்தா வெலேஜோ டவ்லிங் (ஆங்கில மொழி: Camila Vallejo, எசுப்பானியம்: [kaˈmila anˈtonja amaˈɾanta baˈʝexo ˈdaʊlɪŋ]) (vah-YAY-kho) (பிறப்பு ஏப்ரல் 28, 1988) சான்ட்டியாகோ நாடாளுமன்ற கீழ் அவை உறுப்பினர். சிலி இளைஞர் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர். சிலி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவராவார்.[1]
வாழ்க்கை வரலாறு
[தொகு]ஆரம்ப வாழ்க்கை
[தொகு]சிலி தலைநகர் சாண்டியாகோவில் 1988-ல் பிறந்த கமிலாவின் தாய் மரிலா டவ்லிங், தந்தை ரொனால்டோ வலேஜா இருவருமே சிலி கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள். சர்வாதிகாரி அகஸ்டோவின் கைகளில் சிக்கியிருந்த சிலியை விடுவிப்பதற்கான மக்கள் போராட்டத்தில் முன்னணிப் பங்கு வகித்தவர்கள். சிறு வயதில் இருந்து கம்யூனிச வாசனை உள்ள குடும்பத்தில் பிறந்து வளர்ந்த கமிலா, 2006-ல் புவியியல் படிப்புக்காக சிலி பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.[2] அங்கே இடதுசாரி மாணவர் அமைப்புடன் தன்னை இணைத்துக் கொண்டார்.[3]
மாணவர் இயக்கம்
[தொகு]2010 இல் இரண்டாம் ஆண்டு படிக்கும்போதே, சிலி பல்கலைக்கழக மாணவர் பேரவைப் பிரதிநிதி ஆனார். அடுத்த இரண்டாவது ஆண்டில் மாணவர் பேரவைத் தலைவியான போது ஒட்டுமொத்த சிலியும் திரும்பிப் பார்த்தது. 105 வருட சிலி பல்கலைக்கழக வரலாற்றில் இரண்டாவது பெண் தலைவி கமிலாதான். இலவசக் கல்விக்காக கமிலா நடத்திய போராட்டங்களால்தான் உலக அளவில் இவர் பேசப்பட்டார்.
இலவச, மேம்பட்ட கல்வியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 2011இன் இறுதியில் துவங்கிய மாணவர் போராட்டங்களால் சிலி ஸ்தம்பித்தது. ஒவ்வொரு வாரமும் குறைந்தது இரண்டு லட்சம் மாணவர்கள் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து தலைநகர் சாண்டியாகோவை நோக்கி முற்றுகையிட்டனர். 10-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களும், 100-க்கும் அதிகமான பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டன. ஒரு முழுக் கல்வி ஆண்டே ரத்துசெய்யப்பட்டது. '2011-2012 சிலி மாணவர் போராட்டம்’ என வரலாறு இதைக் குறிப்பிடுகிறது. 25 வயது கமிலா, ஆளும் கட்சிக்குப் பெரும் தலைவலியாக உருவெடுத்தார். போராட்டங்களில் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டன. தடியடி நிகழ்த்தப்பட்டது. ஒரு மாணவர் உயிரிழந்தார்.[4]
அரசியல் வாழ்க்கை
[தொகு]இளம் வயதிலேயே சிலி இளைஞர் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக இருக்கிறார்.
[5] நவம்பர் 17, 2013 இல் நடைபெற்ற சிலி பொதுத் தேர்தலில் கமிலா வெலேஜோ 26 ஆவது மாவட்டத்திற்கு நாடாளுமன்ற பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
43 சதவிகித ஓட்டுக்கள் பெற்று மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளார்.[6]
ஆதாரங்கள்
[தொகு]- ↑ Goldman, Francisco (5 April 2012). "Camilla Vallejo, the World's Most Glamorous Revolutionary". The New York Times Magazine. http://www.nytimes.com/2012/04/08/magazine/camila-vallejo-the-worlds-most-glamorous-revolutionary.html. பார்த்த நாள்: 5 April 2013.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 15 சனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 8 திசம்பர் 2013.
- ↑ Aldea, Sofía (16 May 2011). "Compañera Camila". Revista Paula. Archived from the original on 28 ஆகஸ்ட் 2012. பார்க்கப்பட்ட நாள் 5 August 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ http://www.emol.com/noticias/nacional/2011/08/23/499376/corte-suprema-acoge-amparo-a-favor-de-camila-vallejo-y-ordena-rondas-policiales.html
- ↑ "Chile's ex-student leaders march their way to congressional victory". ராய்ட்டர்ஸ். 2013-11-17. Archived from the original on 2013-12-08. பார்க்கப்பட்ட நாள் 2013-11-317.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help); Unknown parameter|=
ignored (help) - ↑ "Chilean student leader Camila Vallejo elected to Congress". The Guardian. 18 நவம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 19 நவம்பர் 2013.