கமல் குமாரி அறக்கட்டளை
சுருக்கம் | KKF |
---|---|
உருவாக்கம் | 1990 |
வகை | தேசிய சேவை அமைப்பு |
நோக்கம் | அறிவியல், தொழில்நுட்பம், கலை, கலாச்சாரம், ஊட்கவியல் மேம்பாடு |
தலைமையகம் | 113 பூங்கா தெரு 9வது தளம் கொல்கத்தா-700016 |
தலைமையகம் | |
சேவை பகுதி | இந்தியா |
வலைத்தளம் | Official website |
கமல் குமாரி அறக்கட்டளை (Kamal Kumari Foundation) என்பது என்பது அசாமில் உள்ள ஒரு தொண்டு அறக்கட்டளை ஆகும். இந்த அறக்கட்டளை இந்திய தொழிலதிபர், தேயிலை தோட்டக்காரர் மற்றும் பரோபகாரர் ஹேமேந்திர பிரசாத் பரூவால்[1] 1990-இல் நிறுவப்பட்டது. இது இவரது தாயார் கமல் குமாரி பருவாவின் நினைவாகத் தோற்றுவிக்கப்பட்டது. இதன் தொண்டு மற்றும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்காக இந்தியாவின் முழுமையும் வடகிழக்குப் பகுதிகளிலும் புகழ்பெற்றது.[2][3]
செயல்பாடுகள்
[தொகு]இந்த அறக்கட்டளை தொடக்கத்திலிருந்தே, அறக்கட்டளையானது[3][4] உள்ளிட்ட பல்வேறு துறைகளை மேம்படுத்துவதில் தீவிரமாகப் பங்கேற்று வருகிறது.
- அசாமின் பல்வேறு பகுதிகளில் நாம்கர்கள் மற்றும் சத்ரியா கலாச்சார மையங்களை மீட்டமைத்தல்
- பொது வசதிகளை உருவாக்குதல் மற்றும் புதுப்பித்தல்
- தேசிய புகழ்பெற்ற நிறுவனங்களில் திறமையான மாணவர்களுக்கு நிதியுதவி செய்தல்
- மாற்றுத்திறனாளி மற்றும் தேவைப்படும் மாணவர்களுக்கு உதவித்தொகையை நிறுவுதல்
- ஏழைகளுக்கு மருத்துவ உதவிகளை வழங்குதல்
- அரிதான அசாமி இலக்கியப் படைப்புகளை வெளியிட நிதி உதவி வழங்குதல்
அசாமில் 150 வருட இதழியல் கொண்டாட்டக் குழுவால் வெளியிடப்பட்ட "அசாமில் 150 வருட இதழியல்" தொகுதியின் வெளியீட்டிற்கான முழு செலவையும் அறக்கட்டளை ஏற்றுக்கொண்டது.[3]
விருதுகள்
[தொகு]அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கலை மற்றும் கலாச்சாரம் மற்றும் பத்திரிகை துறையில் சிறந்து விளங்கும் நோக்கத்துடன் தனிநபர் அல்லது குழுவிற்கு இந்த அறக்கட்டளை ஆண்டுதோறும் மூன்று தேசிய விருதுகளை வழங்குகிறது. விருதுகள்.[3]
- கலை மற்றும் கலாச்சாரம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கியதற்காகக் கமல் குமாரி தேசிய விருது
- சிவ பிரசாத் பரூவா பத்திரிக்கைத் துறையில் சிறந்து விளங்கும் தேசிய விருது
ஒவ்வொரு விருதும் ரூ.2 லட்சம், கோப்பை, பொன்னாடை மற்றும் பாராட்டுப் பத்திரம் கொண்டது.[2][3][4]
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Online Assam". Online Assam. 2014. பார்க்கப்பட்ட நாள் 21 October 2014.
- ↑ 2.0 2.1 "Kamal Kumari awards announced". 2009-04-20. Archived from the original on 2012-02-19. பார்க்கப்பட்ட நாள் 2009-10-16.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 "Syam Sharma selected for Kamal Kumari Award". Hueiyen News Service (Manipur Information Centre). 2009-04-20. பார்க்கப்பட்ட நாள் 2009-10-16.
- ↑ 4.0 4.1 "Kamal Kumari awards presented". The Assam Tribune. 2009-06-29. Archived from the original on 2012-02-19. பார்க்கப்பட்ட நாள் 2009-10-16.