உள்ளடக்கத்துக்குச் செல்

கமலா சின்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கமலா சின்கா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1932-09-30)30 செப்டம்பர் 1932
டாக்கா, வங்காள மாகாணம், இந்தியா
இறப்பு31 திசம்பர் 2014(2014-12-31) (அகவை 82)
சிராகூசு, நியூ யோர்க், அமெரிக்க ஐக்கிய நாடுகள்

கமலா (கம்லா) சின்கா (Kamala Sinha)(30 செப்டம்பர் 1932 - 31 திசம்பர் 2014) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தூதர் ஆவார். இவர் 1990 முதல் 2000 வரை இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் சுரிநாம் மற்றும் பார்படோசின் தூதராக பணியாற்றினார். ஐ. கே. குஜ்ராலின் அமைச்சரவையில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சராகவும் (தன்னாட்சி பொறுப்பு) இருந்தார். இவர் திசம்பர் 31, 2014 அன்று 82 வயதில் நியூயார்க்கில் உள்ள சிராகூசில் இறந்தார்.[1][2]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

கமலா, செப்டம்பர் 30, 1932-ல் டாக்காவில் (தற்போது வங்காளதேசத்தில் உள்ளது) பிறந்தார். ஜனசங்க நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் பேத்தியான சின்கா,[3][4][5][6] புரட்சியாளர், தேசியவாதி, பொதுவுடைமை வாதி ஆவார். கமலா பசாவான் சின்காவினை மணந்தார். பசாவான் சின்கா தொழிற்சங்க வாதி மற்றும் பீகாரில் முதல் எதிர்க்கட்சித் தலைவர் ஆவார்.[7][2][3][4][5][6]

அரசியல்

[தொகு]

1972-84க்கு இடையில் பீகார் சட்டமன்றத்தில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், மாநிலங்களவையில் இரண்டு முறை உறுப்பினராகவும் இருந்த கமலா, பல்வேறு குழுக்களில் உறுப்பினராக இருந்தார்.[2] இவரது கணவர் பசவான் சின்கா விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் ஜெயபிரகாஷ் நாராயண் மற்றும் கர்பூரி தாக்கூர் ஆகியோரின் சக ஊழியர் ஆவார்.[2] ஜெயப்பிரகாஷ் நாராயண் தலைமையிலான இயக்கத்தில் செயல்பட்டபோது உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இவர் தடுத்து வைக்கப்பட்டார். இவர் பல ஆண்டுகளாக இந்து மஸ்தூர் சபாவின் தலைவராக இருந்தார் (மத்திய தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவரான ஒரே பெண்மணி) மற்றும் பல திறன்களில் உலகம் முழுவதும் பரவலாகப் பயணம் செய்தார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Former MoS for External Affairs Kamala Sinha passes away". Business Standard. January 1, 2015. Retrieved January 1, 2015.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "Former union minister Kamla Sinha dies in US away". Times of India. January 1, 2015. Retrieved January 1, 2015.
  3. 3.0 3.1 Hindu, The (2015-01-02). "Kamala Sinha passes away". The Hindu. Retrieved 2019-03-31.
  4. 4.0 4.1 "Former MoS for External Affairs Kamala Sinha passes away". Business Standard News. 2015-01-01. Retrieved 2019-03-31.
  5. 5.0 5.1 PTI (2015-01-01). "Former MoS for External Affairs Kamala Sinha passes away in US". indiatvnews.com. Retrieved 2019-03-31.
  6. 6.0 6.1 "Former MoS for External Affairs Kamala Sinha Dead". 2015-01-01. Retrieved 2019-03-31.
  7. "Bihar's biwi brigade". The Times of India. 6 October 2013. Retrieved 22 November 2017.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கமலா_சின்கா&oldid=3675455" இலிருந்து மீள்விக்கப்பட்டது