உள்ளடக்கத்துக்குச் செல்

கபுர்தலாவின் தாரா தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Maharani Tara Devi
Queen consort of Kapurthala
பிறப்புEugenie Grosup
(1911-01-22)22 சனவரி 1911
வியன்னா, Austria
இறப்பு8 திசம்பர் 1946(1946-12-08) (அகவை 35)
குதுப் நினைவுச்சின்னங்கள்,[a] Delhi, India
புதைத்த இடம்
New Delhi, India
Husband
ஜகத்ஜித் சிங்
(தி. 1942; sep 1945)

தாரா தேவி (Tara Devi) (22 ஜனவரி 1911-8 டிசம்பர் 1946), செக் நாட்டைச் சேர்ந்த நடிகையும் மற்றும் நடனக் கலைஞரும் ஆவார். இவர் 1942 ஆம் ஆண்டில் இந்தியாவின் கபூர்தலா சமஸ்தானத்தைச் சேர்ந்த மன்னர் ஜகத்ஜித் சிங்கின் ஆறாவது மனைவியாக இருந்தார். வியன்னாவில் தாரா தேவி பர்க் நாடக அரங்கத்தில் என்ரிக் இப்சானின் நாடகமான பீர் கின்ட் என்ற நாடகத்தில் அனித்ராவாக நடித்தபோது இவர்கள் சந்தித்து திருமணம் செய்து கொண்டனர்.[1] [1]

1945 ஆம் ஆண்டில் இவர்கள் இருவரும் பிரிந்தனர். அதைத் தொடர்ந்து தாரா தேவி அமெரிக்கா திரும்பத் திட்டமிட்டார். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது. 1946 டிசம்பர் 8 அன்று, தாரா தேவி புது தில்லியிலுள்ள குதுப் மினாரிலிருந்து விழுந்து இறந்தார்.[a][2][1][a]

ஆரம்பகால வாழ்க்கை.

[தொகு]

நினா என்றும் அழைக்கப்படும் தாரா தேவி, வியன்னாவின் நடிகை மரியா எலனோரா குரோசுபுக்கு யூஜெனி குரோசுப் எனப் பிறந்தார்.[4][2]{{Efn|பெரும்பாலான ஆதாரங்கள் தாரா தேவியின் புனைப்பெயராக நினா என்ற பெயரைக் குறிப்பிடுகின்றன.[2][1] ஜகத்ஜித்தின் ஆட்சியின் போது முன்னாள் கபுர்தலா அமைச்சரான திவான் ஜர்மானி தாஸ், மகாராணி என்ற புத்தகத்தில் தாரா தேவிக்கு ஒரு அத்தியாயத்தை அர்ப்பணித்தார். அதில் தாயை நினா என்றும் பாட்டியை பூரா என்றும் குறிப்பிடுகிறார்.[5][1] 1918 ஆம் ஆண்டின் வியன்னாவின் கத்தோலிக்க திருச்சபை பதிவுகள் இவரது பிறந்த தேதியை 22 ஜனவரி 1911 என ஆவணப்படுத்துகின்றன, மேலும் இவரை சட்டவிரோதமாக பிறந்த பெண் என்று விவரிக்கின்றன.

குறிப்பு

[தொகு]
  1. 1.0 1.1 1.2 பல ஆதாரங்கள் இவர் குதுப் மினார் வளாகத்திலிருந்து விழுந்து இறந்ததாக சொகின்றன.[2][1][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "75 let od úmrtí české manželky indického mahárádži Eugenie Grosupové". www.mzv.cz (in செக்). Ministry of Foreign Affairs. 9 January 2022. Archived from the original on 14 October 2023. பார்க்கப்பட்ட நாள் 14 October 2023.
  2. 2.0 2.1 2.2 2.3 Sambuy, Livia Manera (2023). "A most Parisian Maharajah". In Search of Amrit Kaur: An Indian Princess in Wartime Paris (in ஆங்கிலம்). Random House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4735-4629-5.
  3. Butler, John Anthony (2017). "7. His Highness goes shopping: Jagatjit in Asia". Essays on Unfamiliar Travel-Writing: Off the Beaten Track (in ஆங்கிலம்). Newcastle-upon-Tyne: Cambridge Scholars Publishing. p. 200. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4438-6088-8.
  4. Vienna, Austria, Catholic Church Registers, 1600–1960. Baptism records for 1918. Eugenie Grosup, p. 109.
  5. Gaur, Abhilash (2 December 2021). Nina Grosup-Karatsonyi a.k.a. Rani Tara Devi of Kapurthala.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கபுர்தலாவின்_தாரா_தேவி&oldid=4013483" இலிருந்து மீள்விக்கப்பட்டது