கன்னோசியின் வர்மன் வம்சம்
கன்னோசியின் வர்மன் வம்சம் | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
7ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி–8ஆம் நூற்றாண்டின் கடைசி | |||||||||||||||
தலைநகரம் | கன்னோசி | ||||||||||||||
பேசப்படும் மொழிகள் | சமசுகிருதம் | ||||||||||||||
சமயம் | இந்து சமயம் சைனம் | ||||||||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||||||||
வரலாறு | |||||||||||||||
• தொடக்கம் | 7ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி | ||||||||||||||
• முடிவு | 8ஆம் நூற்றாண்டின் கடைசி | ||||||||||||||
| |||||||||||||||
தற்போதைய பகுதிகள் | இந்தியா |
கன்னோசின் வர்மன் வம்சம் (Varman dynasty of Kannauj) என்பது 7-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து 8 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை கன்னோசியையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் ஆட்சி செய்த ஒரு வம்சமாகும். [4] பேரரசர் ஹர்ஷவர்தனனின் மரணத்திற்குப் பிறகு உருவாக்கப்பட்ட அதிகார வெற்றிடத்தை நிரப்பிய யசோவர்மன் என்பவரால் இது நிறுவப்பட்டது.
வரலாறு
[தொகு]நிறுவுதல்
[தொகு]கன்னோசி நகரம் முன்பு பேரரசர் ஹர்ஷவர்தனால் ஆளப்பட்டது. அவர் வாரிசு இல்லாமல் இறந்தார். இதனால் அதிகார வெற்றிடம் உருவாகியது. யசோவர்மன் அதன் ஆட்சியாளராக வெளிப்படுவதற்கு முன்பு இது ஒரு நூற்றாண்டு வரை நீடித்தது. [5] பிரித்தானிய காலத்தின் தொல்லியல் ஆராய்ச்சியாளர் அலெக்சாண்டர் கன்னிங்காம், ஹர்ஷருக்கும் யசோவர்மனுக்கு இடையேயான காலத்தில் கன்னோசின் சாத்தியமான ஆட்சியாளர்களை ஊகித்தார். ஆனால் அவரது கூற்றுகளை ஆதரிக்க சிறிய ஆதாரங்கள் கூட இல்லை. [6] இவரது அரசவைக் கவிஞர் வாக்பதி எழுதிய பிராகிருத மொழிக் கவிதையான 'கௌடவஹோ'வில் ( 'கௌடாவின் அரசனைக் கொன்றது ) [7] இவரைப் பற்றிய பல தகவல்கள் பெறப்பட்டுள்ளன. சைன சரித்திரங்களின்படி, யசோவர்மனுக்கு ஆமா என்ற மகன் இருந்தான். அவன் இவருக்குப் பின்னர் கன்னோசியின் மன்னரானார். [8] [9]
விரிவாக்கம்
[தொகு]வம்சம் அதன் நிறுவனரான யசோவர்மனின் கீழ் மட்டுமே அதன் மிகப்பெரிய அளவையும் செழிப்பின் உச்சத்தையும் அடைந்தது. 'கௌடவஹோ' யசோவர்மன் வட இந்தியாவின் பெரிய பகுதிகளை கைப்பற்றியதாக சித்தரிக்கிறது. பீகார், வங்காளம், மேற்கு தக்காணம், சிந்து சமவெளி மற்றும் காஷ்மீர் உட்பட. கன்னோசிக்கு வெற்றியுடன் திரும்புவதற்கு முன். இருப்பினும், கிபி 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காஷ்மீர் அரசவை வரலாற்றாசிரியரான கல்கணர் தனது இராஜதரங்கிணியில் காஷ்மீரின் மிகவும் சக்திவாய்ந்த கார்கோட ஆட்சியாளரான இலலிதாதித்ய முக்தபிதனால் தோற்கடிக்கப்பட்டவர்களில் ஒருவராக யசோவர்மனை சித்தரிக்கும் மிகவும் வித்தியாசமான கதையை வழங்குகிறார். [10]
ரமேஷ் சந்திர மஜும்தார் பண்டைய கால வெற்றிகளின் கணக்குகளில் எச்சரிக்கையாக இருப்பவர்களில் ஒருவராக இருந்தாலும், யசோவர்மன் "சந்தேகத்திற்கு இடமின்றி இந்தக் காலத்தில் [இப்பகுதியில்] மிகவும் சக்திவாய்ந்த அரசராக இருந்தார்" என்று நம்புகிறார்.
வீழ்ச்சி
[தொகு]யசோவர்மனின் வாரிசுகள் இராச்சியத்தை விரிவுபடுத்தவில்லை. மேலும் அவர்கள் பலவீனமான மன்னர்களாக இருந்ததானால், அவர்கள் நிர்வாகத்தில் அதிக கவனம் செலுத்தவில்லை. அவர்கள் தோல்வியுற்ற ஆட்சியாளர்களாக கருதப்படுகிறார்கள்.[11] ஆமா, தண்டுகன் மற்றும் போஜன் ஆகியோர் முக்கியத்துவமற்ற ஆட்சியாளர்களாகக் கருதப்படுகிறார்கள். அவர்கள் முக்கியத்துவம் வாய்ந்த எந்த வெற்றியையும் அடையவில்லை. மேலும், 15-20 ஆண்டுகள் ஆட்சி செய்தனர்.[12] கடைசி மன்னன், போஜன் புதிதாக நிறுவப்பட்ட ஒரு வம்சத்தவரால் தோற்கடிக்கப்பட்டிருக்கலாம். [12]
சான்றுகள்
[தொகு]- ↑ Schwartzberg, Joseph E. (1978). A Historical atlas of South Asia. Chicago: University of Chicago Press. p. 146, map XIV.2 (e). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0226742210.
- ↑ Map of the territory of the Varman dynasty in Schwartzberg, Joseph E. (1978). A Historical atlas of South Asia. Chicago: University of Chicago Press. p. 146, map XIV.2 (e). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0226742210.
- ↑ Cribb, Joe. "Early Medieval Kashmir Coinage – A New Hoard and An Anomaly" (in en). Numismatic Digest volume 40 (2016): 110. https://www.academia.edu/32663187/Early_Medieval_Kashmir_Coinage_A_New_Hoard_and_An_Anomaly.
- ↑ Map of the territory of the Varman dynasty in Schwartzberg, Joseph E. (1978). A Historical atlas of South Asia. Chicago: University of Chicago Press. p. 146, map XIV.2 (e). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0226742210.
- ↑ Chopra (2003).
- ↑ Tripathi (1989).
- ↑ Majumdar (2003).
- ↑ Mishra 1977, ப. 117.
- ↑ Mishra 1977, ப. 125.
- ↑ Eraly (2011).
- ↑ Rama Shankar Tripathi (1964). History of Kanauj: To the Moslem Conquest. Motilal Banarsidass. p. 211 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0478-4
- ↑ 12.0 12.1 Sen, Sailendra Nath (1999). Ancient Indian History and Civilization (Paperback ed.). New Age International. p. 264–668. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788122411980.