கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல், 2021
Appearance
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல், 2021, 2019 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் எச். வசந்தகுமார் 28 ஆகத்து 2020 அன்று மறைந்தபடியால், இத்தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. எனவே இத்தொகுதிக்கு புதிய மக்களவை உறுப்பினரை தேர்ந்தெடுக்க, 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுடன் சேர்த்து, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் தேர்தல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.[1][2]
தேர்தல் அட்டவணை
[தொகு]கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி தேர்தலின் முக்கிய நாட்கள்:
நிகழ்வு | நாள் |
---|---|
வேட்புமனு தாக்கல் துவக்கம் | மார்ச் 12 |
வேட்புமனு தாக்கல் முடிவு | மார்ச் 19 |
வேட்புமனு பரிசீலனை | மார்ச் 20 |
வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள் | மார்ச் 22 |
வாக்குப் பதிவு நாள் | ஏப்ரல் 6 |
வாக்கு எண்ணிக்கை (தேர்தல் முடிவுகள்) | மே 2 |
வேட்பாளர்கள்
[தொகு]- பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பொன். இராதாகிருஷ்ணன் அவர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார் [3][4][5]
- மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.[6] [7]
வரிசை எண் |
கட்சி | வேட்பாளர் |
---|---|---|
1 | காங்கிரஸ் | விஜய் வசந்த் |
2 | பாஜக | பொன். இராதாகிருஷ்ணன் |
3 | நாம் தமிழர் | அனிட்டீர் ஆல்வின் |
4 | மக்கள் நீதி மய்யம் | சுபா சார்லசு |
தேர்தல் முடிவுகள்
[தொகு]கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரசு கட்சி வேட்பாளர் விஜய் வசந்த் வெற்றி பெற்றார். பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பொன். இராதாகிருஷ்ணன் விட காங்கிரசு வேட்பாளர் விஜய் வசந்த் 1 லட்சத்து 34 ஆயிரத்து 374 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.[8]
வரிசை எண் |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | சதவீதம் |
---|---|---|---|---|
1 | காங்கிரசு | விசய குமார் @விசய் வசந்து | 576037 | 52.5 |
2 | பாசக | பொன். இராதாகிருஷ்ணன் | 438087 | 39.92 |
3 | நாம் தமிழர் | அனிட்டீர் ஆல்வின் | 58593 | 5.34 |
4 | மநீ.மய்யம் | சுபா சார்லசு | 8536 | 0.78 |
5 | நோட்டா | 4938 | 0.45 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Bypolls to Kanyakumari, Malappuram Lok Sabha seats on April 6; election results to be out on May 2
- ↑ Bypolls to Kanyakumari, Malappuram Lok Sabha seats along with Assemby elctions
- ↑ "கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டி". Archived from the original on 2021-03-06. பார்க்கப்பட்ட நாள் 2021-03-06.
- ↑ BJP names Pon. Radhakrishnan for Kanniyakumari bypoll
- ↑ Pon Radhakrishnan is BJP's candidate in Kanyakumari Lok Sabha bypolls
- ↑ கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் விஜய்வசந்த் போட்டி; பொன்.ராதாகிருஷ்ணனுடன் மோதுகிறார்!
- ↑ 21 பேர் கொண்ட காங். வேட்பாளர் பட்டியல் வெளியீடு - கன்னியாகுமரியில் விஜய்வசந்த் போட்டி
- ↑ "கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் வெற்றி". Archived from the original on 2021-10-17. பார்க்கப்பட்ட நாள் 2021-05-03.