கனகா ஹா மா
கனக ஹா மா (Kanaka Ha Ma) ஓர் குறிப்பிடத்தக்க கன்னடக் கவிஞரும், கட்டுரையாளரும் ஆவார். இவர் ஒரு நாடக நடிகராகவும், கன்னட வெளியீடுகளுக்கான சுதந்திரமான பத்திரிகையாளராகவும் செயல்பட்டு வருகிறார்.[1]
குடும்பம்[தொகு]
கனகா, கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்டம் ஹாலிகெரேவைச் சேர்ந்தவர்.[2] இவர் அரசியல்வாதியான பி. சி. விஷ்ணுநாத்தை மணந்தார். தம்பதியருக்கு ஒரு குழந்தை உள்ளது.
பணிகள்[தொகு]
நினாசம் என்ற கலாச்சார அமைப்பை நடத்தும் அக்சரா பிரகாசன் என்பவரால் இவரது மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இவ்ர், உருது கவிஞர், ஜாவேத் அக்தரின் தர்காஷ் என்ற புத்தகத்தை கன்னடத்திற்கு மொழிபெயர்த்தார் [3] இவரது கவிதைகள், ராட்டர்டேமில் நடைபெற்ற சர்வதேச கவிதைகள் நிகழ்ச்சியில் இடம்பெற்று ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவர், கன்னட வெளியீடுகளான லங்காஷ் செய்தித்தாள் , கன்னட தினசரியான உதயவாணி உள்ளிட்ட கன்னடப் பத்திரிகைகளில் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறார். ஸ்பாரோ (SPARROW )பெண்கள் பற்றிய ஆராய்ச்சிக்கான ஒலி மற்றும் பட ஆவணங்களில் பணிபுரியும் போது உருது, மராத்தி, கன்னட எழுத்தாளர்களின் கவிதைகளையும், நேர்காணல்களையும் மொழிபெயர்த்தார்.[4] மேலும், அவர்கள் பற்றிய புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார்.[5] இவர் கடந்த 3 ஆண்டுகளாக செங்கனூரில் [6] தென்னிந்திய எழுத்தாளர் குழு ஏற்பாடு செய்த பம்பா (People for Performing Arts and More) என்பதின் நிறுவனர் உறுப்பினராகவும் , இயக்குனராகவும் இருக்கிறார்.[7] நவம்பர் 1997இல் பிரான்சின் ஐவ்ரி சுர் சீனில் நடந்த சர்வதேச கவிதை போட்டியில் கனிமொழி, பெய் தாவோ போன்ற பிற புகழ்பெற்ற கவிஞர்களுடன் கலந்து கொண்டார்.[8]
வெளியீடுகள்[தொகு]
இவருடைய சில படைப்புகள்
- ஹோலபாகிலு (ஆற்றின் வாயில்), 1993) [9]
- பாபநாசினி (பாவங்களை அழிப்பவர்), 1997) [9]
- அரபி எம்ப கடலு (அரேபிய கடல்), 2006) [10]
- பட்டாலிகே (தர்காஷ், 2003) [11]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Kanaka Ha. Ma". Poetry International Rotterdam. Poetry International. பார்க்கப்பட்ட நாள் 16 May 2016.
- ↑ "Nature poetry: a second renaissance?". Sunday Herald Articulations. Deccan Herald. Archived from the original on 30 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 15 May 2016.
- ↑ D'souza, Priya. "Poems are a garland of small freedoms". Poetry International Rotterdam. Poetry International Rotterdam. Archived from the original on 17 ஜூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 15 May 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Publication Translations". Sparrow Online. Sound and Picture Archives for Research on Women. Archived from the original on 15 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 16 May 2016.
- ↑ Ha. Ma., Kanaka. "Participants". Bangalore Literature Festival 2015. Bangalore Literature Festival. பார்க்கப்பட்ட நாள் 16 May 2016.
- ↑ "South India Writers' Ensemble at Chengannur on 24th July". DC Books. DC Books. பார்க்கப்பட்ட நாள் 15 May 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "SIWE Invitation" (PDF). Anjali Writes. Wordpress. பார்க்கப்பட்ட நாள் 15 May 2016.
- ↑ "Looking at It This Way". Open The Magazine. Open Media network. பார்க்கப்பட்ட நாள் 16 May 2016.
- ↑ 9.0 9.1 "Kanaka Ha. Ma". Akshara Prakashana. Akshara Prakashana. Archived from the original on 30 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 15 May 2016.
- ↑ "Arabi emba kadalu". Akshara Prakashana. Akshara Prakashana. Archived from the original on 30 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 15 May 2016.
- ↑ "Catalog" (PDF). Indira Gandh National Center for the Arts SRC.