கந்தையா கனகரத்தினம்
கந்தையா கனகரத்தினம் K. Kanagaratnam | |
---|---|
இலங்கை நாடாளுமன்றம் வட்டுக்கோட்டை | |
பதவியில் 1947–1952 | |
பின்னவர் | வி. வீரசிங்கம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 28 சூலை 1892 |
இறப்பு | அக்டோபர் 3, 1962 | (அகவை 70)
அரசியல் கட்சி | அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் |
தொழில் | அரச அதிகாரி |
இனம் | இலங்கைத் தமிழர் |
கந்தையா கனகரத்தினம் (Kandiah Kanagaratnam, 28 சூலை 1892 - அக்டோபர் 3, 1962)[1] இலங்கைத் தமிழ் அரசியல்வாதி ஆவார். இவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற செயலாளராகவும் இருந்தவர்.
ஆரம்ப வாழ்க்கை
[தொகு]கனகரத்தினம் இலங்கையின் வடக்கே வட்டுக்கோட்டையில் கந்தையா. செல்லம்மா ஆகியோருக்கு 1892 சூலை 28 இல் (ஆடி 28) பிறந்தார்.[2][3]
அரசுப் பணி
[தொகு]கனகரத்தினம் 1911 இல் அரசு எழுத்தர் பணியில் இணைந்தார்.[2] 1925 இல் தலைமைக் கணக்காய்வுப் பரிசோதகரானார்.[2] பின்னர் இவர் பிரதிக் கணக்காய்வாளர் நாயகமாகவும், பின்னர் பதில் கணக்காய்வாளர் நாயகமாகவும் பணியாற்றினார்.[2]
அரசியலில்
[தொகு]கனகரத்தினம் 1947 நாடாளுமன்றத் தேர்தலில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வட்டுக்கோட்டைத் தொகுதியில் போட்டியிட்டு 9,487 அதிகப்படியான வாக்குகளால் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[4] 1948 செப்டம்பர் 3 இல் தமிழ்க் காங்கிரசு கட்சி டி. எஸ். சேனநாயக்கா தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசில் இணைந்ததை அடுத்து கனகரத்தினம் கல்வி அமைச்சருக்கான நாடாளுமன்ற செயலாளராக நியமிக்கப்பட்டார்.[2]
1952 தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட கனகரத்தினம், இம்முறை சுயேட்சை வேட்பாளர் வி. வீரசிங்கத்திடம் 426 வாக்குகளால் தோற்றார்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Directory of Past Members: Kanagaratnam, Kandiah". இலங்கை நாடாளுமன்றம்.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 ஆறுமுகம், எஸ். (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. pp. 69–70.
- ↑ "பெரியார் க. கனகரத்தினம்". 1982. பார்க்கப்பட்ட நாள் 1 பெப்ரவரி 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Result of Parliamentary General Election 1947" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2015-04-06.
- ↑ "Result of Parliamentary General Election 1952" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2015-04-06.