கதைவளம் (சிற்றிதழ்)
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கதைவளம் இலங்கையிலிருந்து 1968ல் வெளிவந்த ஒரு சிறுகதை விமர்சன மாத இதழாகும். இதன் முதல் இதழ் 1968 ஜனவரியில் வெளிவந்துள்ளது.
ஆசிரியர்
[தொகு]- ரகுராமன்
வெளியீடு
[தொகு]மரபு நிலையம் 231, ஆதிருப்பள்ளித்தெரு, கொழும்பு 13
உள்ளடக்கம்
[தொகு]தினபதி நாளிதழின் தினமொரு கதைத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பிரசுரமான கதைகள் பற்றிய விமர்சன ஆய்வு இதழாக இது காணப்படுகின்றது. இலங்கையில் சிறுகதைகளை வளர்க்க வேண்டும் என்ற உயரிய நோக்கினை அடிப்படையாகக் கொண்டு இவ்விதழ் வெளிவந்திருப்பதை அவதானிக்கலாம்.