உள்ளடக்கத்துக்குச் செல்

கதைப்புலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலக்கியத்தில் கதைப்புலம் (Setting) என்பது, கதை இடம்பெறும் வரலாற்றுக் காலம், புவியியல் நிகழ்விடம் போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு கூறு ஆகும். இது, கதைக்கான பின்னணியையும், மனநிலையையும் வெளிப்படுத்த உதவுகிறது. கதைப்புலம் கதையின் உலகம் என்று சொல்லப்படுகிறது.[1] இது கதையில் நெருங்கிய சூழலையும் கடந்து பரந்த பின்புலத்தை, குறிப்பாகச் சமூகம் சார்ந்த பின்புலத்தை, வழங்குகிறது. பண்பாடு, வரலாற்றுக் காலம், புவியியல், நேரம் என்பன கதைப்புலத்தின் கூறுகளாக அமையக்கூடும். கதைத் திட்டம், கதைமாந்தர், பாணி, கருப்பொருள் என்பவற்றோடு கதைப்புலமும் புனைகதையின் அடிப்படையான கூறாகக் கருதப்படுகிறது.[2]

கதைப்புலத்தின் வகிபாகம்

[தொகு]

மனிதன்-இயற்கை, மனிதன்-சமூகம் போன்றவை சார்ந்த கதைகளில், கதைக்கு உதவும் முக்கியமான கூறாகக் கதைப்புலம் விளங்குகிறது. சில கதைகளில் கதைப்புலமே ஒரு கதாபாத்திரமாவதும் உண்டு. "கதைப்புலம்" பெரும்பாலும், புனைகதையின் நிகழ்வுகள் இடம்பெறும் சமுதாயச் சூழலைக் குறிப்பதற்குப் பயன்படுகிறது.[3] புதின ஆசிரியரும், புதினம் எழுதுவதில் விரிவுரையாளருமான உடொன்னா இலெவின் (Donna Levin) சமுதாயச் சூழல் எவ்வாறு கதை மாந்தர்களுக்கு மதிப்பைக் கொடுக்கின்றது என்பதை விளக்கியுள்ளார்.[4] சிறுவர்களைப் பொருத்தவரை கதைப்புலம் என்பது வெறும் பின்னணிக் காட்சியாகவே எடுத்துக்கொள்ளப்படும். காலப்போக்கில், கதைப்புலம் என்பதில் காலம் போன்ற பிற கூறுகளையும் சேர்த்து விரிவாக்கப்படும். சில கதைகளில் காலம் நிலைத்ததாக இருக்கும். வேறு சிலவற்றில் காலம், பருவ மாற்றங்கள், இரவும் பகலும் போன்றவற்றை உள்ளடக்கி இயக்கம் கொண்டதாக இருக்கும்.

கதைப்புல வகைகள்

[தொகு]
  • மாற்று வரலாறு
  • நடவடிக்கைக் கதைப்புலம்
  • உருவாக்கிய உலகம்
  • பிறழ்ந்த உலகம்
  • மிகுபுனைவு உலகம்
  • புனைநகரம்
  • புனைநாடு
  • புனைவு அமைவிடம்
  • எதிர்கால வரலாறு
  • கற்பனை உலகம்
  • தொன்மஞ்சார் இடம்
  • இணையண்டம்
  • அறிவியற் புனைகதைக் கோள்கள்
  • மெய்நிகர்ப்பு
  • இலட்சியச் சமுதாயம்

குறிப்புகள்

[தொகு]
  1. Truby, 2007, p. 145
  2. Obstfeld, 2002, p. 1, 65, 115, 171.
  3. Lodge, 1992, pps. 58-60.
  4. Levin, 1992, pps.110-112.

உசாத்துணைகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கதைப்புலம்&oldid=4071825" இலிருந்து மீள்விக்கப்பட்டது