உள்ளடக்கத்துக்குச் செல்

கண்ணுபடப்போகுதய்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண்ணுபடப்போகுதய்யா
இயக்கம்பாரதி கணேஷ்
தயாரிப்புஆர். பி. சௌத்ரி
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்புவிஜயகாந்த்
சிம்ரன்
கரன்
சிவகுமார்
லட்சுமி
ஒளிப்பதிவுவிக்டர் எஸ். குமார்
படத்தொகுப்புவி. ஜெய்சங்கர்
கலையகம்சூப்பர் குட் பிலிம்ஸ்
வெளியீடு7 நவம்பர் 1999
ஓட்டம்155 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

கண்ணுபடப்போகுதய்யா (Kannupada Poguthaiya) 1999 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7 ஆம் நாளன்று விஜயகாந்த், சிம்ரன் மற்றும் கரண் நடிப்பில் பாரதி கணேஷ் இயக்கத்தில் தமிழில் வெளியான குடும்பத் திரைப்படமாகும்.[1] இப்படம் வணிகரீதியில் வெற்றிப்படமாக அமைந்தது[2] . இந்தியில் கரம் புத்ரா என்று மொழிபெயர்க்கப்பட்டது[3]

கதைச்சுருக்கம்[தொகு]

கிராமத்தின் பெரிய மனிதர் சிவகுமார். அவர் மனைவி லட்சுமி. இவர்களின் மகன்கள் வெற்றிவேல் (விஜயகாந்த்) மற்றும் சுப்பிரமணி (கரண்). அவ்வூர் பள்ளியின் ஆசிரியரின் (ஜெய்கணேஷ்) மகள் கௌரி (சிம்ரன்). வெற்றிவேல் - கௌரி ஒருவரையொருவர் விரும்புகின்றனர். கல்லூரிப் படிப்பை முடித்து கிராமத்திற்குத் திரும்பும் சுப்ரமணியின் உயிரை கௌரி காப்பாற்றுகிறாள். இதனால் கௌரியை விரும்பத் தொடங்கும் சுப்பிரமணி தான் காதலிப்பதை வெற்றிவேலிடம் கூறுகிறான். தன் சகோதரனின் காதலுக்காக தன் காதலைத் தியாகம் செய்யும் வெற்றிவேல் தான் திருமணம் செய்துகொள்ளாமல் சுப்பிரமணி - கௌரி திருமணத்தை நடத்திவைக்கிறார்.

தங்களின் எதிரியான ராதாரவியின் மகன் ஆனந்தராஜின் மகள் ராதிகாசௌத்ரியை வெற்றிவேலுவிற்கு திருமணம் செய்துவைக்க எண்ணுகிறார்கள். வெற்றிவேலின் எதிரியான பொன்னம்பலம் சுப்ரமணியிடம் வெற்றிவேல் மற்றும் கௌரியைப் பற்றித் தவறாகக் கூறுகிறான். இதை உண்மையென்று நம்பி சுப்பிரமணி வெற்றிவேலிடம் சண்டையிடுகிறான். வெற்றிவேல் வருத்தத்துடன் வீட்டைவிட்டு வெளியேறுகிறார்.

இதை அறிந்து கோபப்படும் சிவகுமார் - லட்சுமி இருவரும் வெற்றிவேல் தங்களின் வளர்ப்பு பிள்ளை என்றும், வெற்றிவேலின் தந்தை வாசு தேவராயர்தான் (விஜயகாந்த்) ராதாரவியின் மகளான லட்சுமியை அவர்கள் வீட்டு வேலையாளான சிவகுமாருக்குத் திருமணம் செய்து வைத்ததையும், அதனால் ராதாரவியும் ஆனந்தராஜும் வாசுதேவராயரைக் கொன்றதையும், வாசுதேவராயர் அவர் மகன் வெற்றிவேலையும் சொத்துக்களையும் தங்களைப் பாதுகாக்கச் சொல்லி விட்டுச்சென்றதையும் சுப்ரமணியிடம் கூறுகின்றனர். தன் தவறை உணர்ந்த சுப்பிரமணி வெற்றிவேலிடம் மன்னிப்புக் கேட்கிறான். ராதாரவி மற்றும் ஆனந்தராஜின் சம்மதத்தோடு வெற்றிவேல் - ராதிகா சௌத்ரி திருமணம் நடைபெறுகிறது.

நடிகர்கள்[தொகு]

இசை[தொகு]

இப்படத்தின் இசையமைப்பாளர் எஸ். ஏ. ராஜ்குமார்.[4][5]

வ.எண் பாடல் பாடலாசிரியர் பாடகர்கள் காலநீளம்
1 மூக்குத்தி முத்தழகு எஸ். ஏ. ராஜ்குமார் ஹரிஹரன் 5:00
2 கண்ணோரமாய் கதை பேசு கலைக்குமார் எஸ். பி. பாலசுப்ரமணியன் , சித்ரா 4:22
3 ஆனந்தம் ஆனந்தம் வைரமுத்து மனோ, பிஜு நாராயணன் 4:53
4 எழுந்தால் மலை போல மு. மேத்தா எஸ். ஏ. ராஜ்குமார் 4:41
5 மனச மடிச்சு கலைக்குமார் எஸ். பி. பாலசுப்ரமணியன் , சித்ரா 4:11

மேற்கோள்கள்[தொகு]

  1. "நட்சத்திர படப் பட்டியல்" (in Ta). Cinema Express: pp. 41–43. 1 December 2002 இம் மூலத்தில் இருந்து 2 February 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240202064212/https://ibb.co/cTSgjhM. 
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-05-12. பார்க்கப்பட்ட நாள் 2019-02-04.
  3. https://www.youtube.com/watch?v=SjvQdpG4aA0
  4. "Kannupada Pokuthaiya". JioSaavn. January 1999. Archived from the original on 7 June 2022. பார்க்கப்பட்ட நாள் 19 June 2023.
  5. "Taalam / Kannu Pada Poguthaiya". AVDigital. Archived from the original on 19 June 2023. பார்க்கப்பட்ட நாள் 19 June 2023.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணுபடப்போகுதய்யா&oldid=4002633" இலிருந்து மீள்விக்கப்பட்டது