உள்ளடக்கத்துக்குச் செல்

கணித உளவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணித உளவியல் (Mathematical Psychology) என்பது உளவியல் ஆய்விற்கான ஒரு அணுகுமுறையாகும். இது கணித மாதிரிகளை புலன்காட்சி, புலன் உணர்வு மற்றும் உடல் இயக்கச் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டது. அதன் விதிமுறைகளை விதிக்கும் தருணத்தில் எண்ணத்தகுந்த தூண்டல் பண்புகளோடு நடத்தையை இணைப்பதாக அமைகிறது. இதன் கருதுகோளை உருவாக்கும் இலக்கில் கணித அணுகுமுறை பயன்படுகிறது, அவை மிகுந்த நேர்த்தியான மற்றும் பட்டறிவான மதிப்பீட்டினை வழங்குவதாக அமைந்திருக்கும். எண்ணத்தகுந்த நடத்தையானது செயல்திறன் மூலம் தொடர்பயிற்சியின் வாயிலாக விளைகிறது.

மையக் கூறு

[தொகு]
  • அளவீட்டுக் கூறானது கணித உளவியலின் மையக் கூறாகக் கருதப்படுகது. எனவே கணித உளவியலானது உள அளவியல் இயக்கத்துடன் (Psycholometrics) மிக நெருங்கிய தொடர்புடையது, இருந்த போதிலும் உள அளவியலானது தனி நபர் வேறுபாட்டின் நிலை மாறியாக கருதப்படுகிறது.
  • கணித உளவியலானது தனி நபாிடம் காணக்கூடிய புலன் காட்சி, புலன் உணர்வு மற்றும் உடல் இயக்கச் செயல்பாடுகளின் வாயிலாக அறியப்படும் மாதிரி செயல்பாடுகளினை நோக்கியதாக அமைகிறது. மேலும் உள அளவியல் இயக்கத்தின் சோதனையானது முழு பகுதியில் மாறிகளுக்கு இடையேயான வாய்ப்புகளையும் கணித உளவியலானது பெரும்பாலும் பரிசோதனை மூலம் பெறக்கூடிய தரவுகளின் மாதிரியினை மையமாக் கொண்டு அமைகிறது. ஆதலால் இவை செய்முறை உளவியல் - அறிவாற்றல் உளவியல் - |புலன் உயர்வு உளவியல் போன்றவைகளுடன் மிக நெருங்கிய தொடர்புடையதாகும். கணித உளவியலானது நரம்பு இயங்கியல் போலவே தொடர்ச்சியாக புள்ளியல் பொருத்தப்பாடினையே வழிகாட்டும் குறிக்கோளாக எடுத்துக்கொள்வது என்பது, மனித மூளையானது தகுந்த வழியில் பிரச்சனைகளை தீர்க்கும் திறன் பொருட்டு அமைகிறது.
  • புலன் உணர்வு உளவியலில் இருந்து அறியப்படும் மையக் கருத்தானது வரையறுத்த, வரையரையற்ற செயல்பாடுகளுக்கு இடையே ஆனதாகவும் தொடர் மற்றும் இணைச் செயல்பாடுகளுக்கு இடையே ஆனதாகவும் அமைகிறது.

கணிதம் சார்ந்த பிற உளவியல் கூறுகள்

[தொகு]

கணித உளவியலாளர்கள் உளவியலின் ஏனைய தளங்களில் செயல்புரிகின்றனர். அது குறிப்பிடத்தக்க உளப்பெளதிகம், உணா்வுக்கிளர்ச்சி, புலன்காட்சி, பிரச்சனையைத் தீர்த்தல், முடிவுகைளத் தீர்மானித்தல், கற்றல், நினைவாற்றல் மற்றும் மொழி ஆகியன புலனுணர்வு உளவியலின் கணக்கிடக்கூடிய பகுப்பாய்வு நடத்தையும் ஆகும். உதாரணமாக மருத்துவ உளவியல், சமூக உளவியல், இசைவழி உளவியல் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

முக்கிய கோட்பாடுகள் மற்றும் மாதிரிகள்

[தொகு]

இவை மூன்று வகைப்படும்.[1]

  1. புலன் உணர்வு, புலன் காட்சி மற்றும் உளபௌதிகம்
    1. ஸ்டீவென்சின் சக்தி விதி
    2. வெபர்-பெச்னர் விதி
  2. தூண்டல் கண்டறிதல் மற்றும் பாகுபாடு
    1. சைகை கண்டறிதல் கோட்பாடு
  3. தூண்டல் அடையாளம்
    1. திரட்டி மாதிரிகள்
    2. பரப்புவதற்காக மாதிரிகள்
    3. புதுப்பித்தல் மாதிரிகள்

மேற்கோள்கள்

[தொகு]
  1. Luce, R. Duncan (1986). Response Times: Their Role in Inferring Elementary Mental Organization. Oxford Psychology Series. Vol. 8. New York: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-503642-5.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கணித_உளவியல்&oldid=3850403" இலிருந்து மீள்விக்கப்பட்டது