கட்டுமரம்
Appearance
கட்டுமரம் (ⓘ) (Catamaran) என்பது ஒரே அளவிலான பட்டை உறிக்கப்பட்ட இரண்டு மரக்கட்டைகளை இணையாக இணைத்து வைத்து கட்டப்பட்டதொரு படகு ஆகும். இதனுடைய நிலைத்தன்மையானது நீளமான கழியைக் கொண்டு படகை செலுத்துபவரால் கட்டுப்படுத்தப்படுகிறது. கட்டுமரம் என்பது ஒரு தமிழ்ச்சொல் ஆகும். இதனை ஆங்கிலேயர்கள் ``கேட்டமரன்’’ பெயரிட்டு அழைத்தார்கள். கட்டுமரம் என்பதற்கு ``மரங்கள் ஒன்றாகக் கட்டப்பட்ட’’ என்பது பொருளாகும். அளவில் சிறிய கட்டுமரங்கள் முதல் பெரிய கட்டுமரங்கள் வரை தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன.[1]