உள்ளடக்கத்துக்குச் செல்

கட்டுப்பாட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஓர் அமைப்பின் (System) இயக்கத்தை சரிவர இயங்க ஏற்றவாறு சமிக்ஞைகளை அல்லது உத்தரவுகளை வழங்கும் பிரிவை கட்டுபாட்டு அமைப்பு என்றும், எவ்வாறு அக்கட்டுபாட்டு அமைப்பை கணித ரீதியாக விபரித்து, இலத்திரனியல் சுற்று அல்லது இயந்திர அமைப்பு கொண்டு செயல்படுத்தலாம் என்பதை ஆயும் துறையை கட்டுப்பாட்டியல் (Control theory) என்றும் குறிப்பிடலாம்.

கட்டுப்பாட்டியல் வரலாறு

[தொகு]

ஒரு செயல்பாட்டை அல்லது அமைப்பை நிர்வாகிக்க அல்லது கட்டுப்படுத்த வேண்ட்டிய தேவை என்றும் இருந்து வருகின்றது. உதாரணத்துக்கு வயல்களுக்கு நீர் பாய்ச்சுதலை கட்டுப்படுத்தல் பயிர்களுக்கு தேவைக்கேற்ற நீரை பகிர உதவுகின்றது. வாய்க்கால்கள், வரம்புகள் துணை கொண்டு வயல்களுக்கு நீர் பகிர்தலை நிர்வாகிக்க முடியும். பாரிய நிறுவன வயல்களில் விமானம் மூலம் கட்டுப்படுத்தப்பட்ட நீர் பகிர்தலும் இடம்பெறுகின்றது.

மாட்டு வண்டியில் பயணம் செய்யும் பொழுது, கடலில் பாய்மரக்கப்பலில் பயணம் செய்யும் பொழுது வேக விகிதத்தை, திசையை கட்டுப்படித்தல் அவசியமாகின்றது. பாய்மரக்கப்பலின் பாய்களை கட்டுவது இறக்குவது, துலாவது போன்ற நடவடிக்க்கைகளின் ஊடாக அதை கட்டுப்படுத்தலாம்.

இப்படியாக ஆரம்ப காலம் தொட்டு கட்டுப்படுத்தல் என்பது மனிதனின் அனேக செயல்பாடுகளின் ஒரு அடிப்படை அம்சமாக இருந்து வருகின்றது.

நுட்பியல் சொற்கள்

[தொகு]
  • பின்னூட்டுக் கட்டுப்பாடு
  • PID கட்டுப்பாடு
  • குறை சுற்றுக் கட்டுப்பாடு
  • நிறை சுற்றுக் கட்டுப்பாடு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டுப்பாட்டியல்&oldid=1599391" இலிருந்து மீள்விக்கப்பட்டது