கட்டி (சங்ககால அரசன்)
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சோழன் பெரும்பூட் சென்னியை எதிர்த்துப் பொரிட்ட எழுவர் கூட்டணியில் கட்டி என்பவனும் ஒருவன். கட்டூர் என்னுமிடத்தில் நடந்த போரில் சோழர் படைத்தலைவன் பழையனைக் கொன்றது. பின்னர் பெரும்பூட் சென்னியே தலைமையேற்று போரிட்டபோது எழுவர் கூட்டணியில் அறுவர் தப்பி ஓடிவிட்டனர். தப்பி ஓடியவர்களில் இவனும் ஒருவன். கணையன் மட்டும் அகப்பட்டுக்கொண்டான். அவன் சோழநாட்டுக் கழுமலச் சிறையில் அடைக்கப்பட்டான்.
புலவர் குடவாயிற் கீரத்தனார் இந்தச் செய்திகளைத் தம் பாடலில் குறிப்பிட்டுள்ளார். (அகநானூறு 44)
தித்தன் மகன் தித்தன் வெளியன் உறையூரில் இருந்து அரசாட்சி புரிந்தபோது இந்தக் கட்டி அரசன் தாக்குவதற்காக வந்து பின்னர், பயந்து ஓடிவிட்டான்.