கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம்
சிஎஸ்ஐஆர்-கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் (ஆங்கிலம்: CSIR-Structural Engineering Research Centre CSIR-SERC ), சென்னை, இந்தியாவில் அமைந்துள்ள அறிவியல் மற்றும் தொழில்துறை ஆய்வுக் கழகத்தின் 39 ஆய்வகங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனம்,ISO:9001 தர சான்றளிக்கப்பட்ட நிறுவனம் ஆகும். [1]
உரிமை ஆவணம்[தொகு]
சிஎஸ்ஐஆர்-எஸ்இஆர்சி (ஆங்கிலம்: CSIR-SERC) ஆனது கட்டமைப்புகளை வடிவமைத்தல் (ஆங்கிலம்: designing), கட்டுமானம் (ஆங்கிலம்: construction) மற்றும் மறுவாழ்வுத் (ஆங்கிலம்: rehabilitation) துறையில் ஆய்வு மற்றும் மேம்பாட்டில் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனம் பல்வேறு பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கு வடிவமைப்பு ஆலோசனை மற்றும் சான்று சரிபார்ப்பு உள்ளிட்ட சேவைகளை வழங்குகிறது.
பயிற்சி பொறியாளர்களுக்கான சிறப்புப் படிப்புகளையும் இந்நிறுவனம் வழங்குகிறது.
வசதிகள்[தொகு]
இந்த நிறுவனம் பல்வேறு ஆய்வகங்களைக் கொண்டுள்ளது, அவை பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளன.
- மேம்பட்ட கான்கிரீட் சோதனை மற்றும் மதிப்பீட்டு ஆய்வகம் (ஆங்கிலம்: Advance Concrete Testing and Evaluation Lab)
- மேம்பட்ட கட்டடப் பொருட்களுக்கான ஆய்வகம் (ஆங்கிலம்: Advance Materials Lab)
- மேம்பட்ட நில அதிர்வு சோதனை மற்றும் ஆராய்ச்சி ஆய்வகம் (ஆங்கிலம்: Advanced Seismic Testing and Research Lab)
- தளர்வு மற்றும் தகர்வு ஆய்வகம் (ஆங்கிலம்: Fatigue and Fracture Lab)
- சிறப்பு மற்றும் பலவகை உறுப்புகளின் இயக்கம் சார்ந்த கட்டமைப்புகளுக்கான ஆய்வகம் (ஆங்கிலம்: Special and Multifunctional Structures Lab)
- எஃகு கட்டமைப்புகள் ஆய்வகம் (ஆங்கிலம்: Steel Structures Lab)
- கட்டமைப்பு நலம் குறித்த கண்காணிப்பு ஆய்வகம் (ஆங்கிலம்: Structural Health Monitoring Lab)
- கருத்தியல் மற்றும் கணக்கீட்டு இயக்கவியல் ஆய்வகம் (ஆங்கிலம்: Theoretical & Computational Mechanics Lab)
- கோபுரம் சோதனை மற்றும் ஆய்வு நிலையம் (ஆங்கிலம்: Tower Testing & Research Station)
- காற்றாலை பொறியியல் ஆய்வகம் (ஆங்கிலம்: Wind Engineering Lab)