உள்ளடக்கத்துக்குச் செல்

கடவுள் உண்டா இல்லையா? (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கடவுள் உண்டா இல்லையா?
நூல் பெயர்:கடவுள் உண்டா இல்லையா?
ஆசிரியர்(கள்):ஏ. பாலசுப்ரமண்யம்
வகை:கேள்வி-பதில்
துறை:பொருள் முதல்வாதம்
அறிவியல் அறிவு
இடம்:சென்னை
மொழி:தமிழ்
பக்கங்கள்:16
பதிப்பகர்:பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ தெரு,
தேனாம்பேட்டை,
சென்னை 600 018.
பதிப்பு:முதற்பதிப்பு ஏப்ரல் 2005 நான்காம் பதிப்பு 2009

கடவுள் உண்டா இல்லையா? என்னும் நூல் ஆத்திகரும், நாத்திகரும் சந்தித்து உரையாடும் கேள்வி-பதில் தொகுப்பாகும்.

நூலாசிரியர்

[தொகு]

இந்நூலின் ஆசிரியர் ஏ.பாலசுப்ரமண்யம் திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் நகரிலுள்ள சவரியார் பாளையம் பகுதியில் வசித்தவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின், தமிழ் மாநிலக் குழு செயலாளராக நீண்டகாலம் இருந்தவர். இராமாயண விமர்சனம் எழுதிய அமிர்தலிங்க அய்யரின் மகனாவார். ஒடுக்கப்பட்ட மக்கள், பாட்டாளிகளின் அரசை இந்திய மண்ணில் நிறுவ தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர்.

உள்ளடக்கம்

[தொகு]

இந்நூலில் பின்வரும் தலைப்புகளில் கட்டுரைகள் உள்ளன:

  • உடற்கூறு சாத்திரம் (Physiology)
  • தாவர சாதந்திரம் (Botany)
  • பிராணி சாத்திரம்(Zoology)
  • பூகோள சாத்திரம் (Geography)
  • பூதத்வ சாத்திரம் (Geology)
  • வான சாத்திரம் (Astronomy)
  • வேதாந்தம்(Philosophy)
  • "பிரபஞ்ச" அறிவு அல்லது பிரபஞ்சம் பற்றிய கண்ணோட்டம்