கடல் தேவதை காஞ்சனா


கடல் தேவதை காஞ்சனா அல்லது செரி காஞ்சனா ரதி கிடோல் (இந்தோனேசியம்: Kanjeng Ratu Kidul; Sri Gusti Kanjeng Ratu Kidul; ஜாவானியம்: ꧋ꦱꦿꦶꦒꦸꦱ꧀ꦠꦶꦏꦚ꧀ꦗꦼꦁꦫꦠꦸꦏꦶꦢꦸꦭ꧀) என்பவர் ஜாவா தீவு மக்களிடையே; அதாவது மேற்கு ஜாவா, மத்திய ஜாவா, கிழக்கு ஜாவா மற்றும் பாலி தீவு மக்களிடையே மிகவும் புகழ்பெற்ற ஒரு புராணக் கதைமாந்தர் ஆவார். இவரின் பெயர் பொதுவாக இவருடைய தங்கை இரங்கா தேவி (Dewi Rengganis) என்பவருடன் சமப் படுத்தப்படுகிறது. உண்மையில் இருவரும் வேறுபட்டவர்கள்.
பொதுவாக, கடல் தேவதை காஞ்சனா ஒரு முக்கியமான நிகழ்வு வரப்போகிறது என்பதற்கான எச்சரிக்கையைக் கொடுப்பதற்காகத் தோன்றுகிறார் என ஜாவானிய மக்கள் நம்புகின்றனர்.[1] ஜாவானிய புராணங்களில், காஞ்சனா ரதி கிடோல் என்பவர் கப்பிங் தெலு கடவுளாரின் (Kaping Telu) படைப்பு என நம்பப்படுகிறது. அந்த வகையில், காஞ்சனா ரதி கிடோல் என்பவர் சிறீ தேவி (Dewi Sri) எனும் அரிசியின் தெய்வமாகவும்; இயற்கையின் பிற தெய்வங்களாகவும்; உலக வாழ்க்கையை நிரப்புகிறார் என நம்பப்படுகிறது.
இதற்கிடையில், நிய் ரோரோ கிடுல் எனும் இரங்கா தேவி முதலில் சுண்டா இராச்சியத்தைச் சேர்ந்த இளவரசி என்றும்; அவரின் மாற்றாந்தாய் கொடுத்த அழுத்தங்களினால், அவரின் தந்தை, இளவரசி நிய் ரோரோ கிடுலை அரண்மனையில் இருந்து வெளியேற்றினார் என்றும்; ஜாவானிய புராணங்களில் வெவ்வேறு கட்டங்களில் சித்தரிக்கப்படுகின்றது.
சித்தரிப்பு
[தொகு]இந்தோனேசிய புராணம் நாட்டுப்புறக் கதைகள் (ஒரு பகுதி) |
---|
![]() |
ஜாவானிய மக்களின் நம்பிக்கையின்படி, கடல் தேவதை காஞ்சனா, ஆழ்க்கடலின் மையத்தில் அமைந்துள்ள அவரின் அரண்மனையிலிருந்து இந்தியப் பெருங்கடலின் பேரலைகளின் மீது அதிகாரம் கொண்டுள்ளார். மாதரம் மன்னர்கள்; மாதரம் சேனாபதி (Senapati dari Mataram); சுராகார்த்தா அரசர் பாகுபுவனா அரச மரபினர் (Pakubuwana); மற்றும் நாகயோக்யகர்த்தா சுல்தானக மன்னர்கள் (Kesultanan Ngayogyakarta Hadiningrat); யோக்யகர்த்தா சுல்தான் அமெங்குபுவானா (Hamengkubuwana); போன்றவர்களின் ஆன்மீகப் பெண்தெய்வம் எனவும் கடல் தேவதை காஞ்சனா அறியப்படுகிறார்.
சுராகார்த்தா அரண்மனையால், செரி குஸ்தி கஞ்செங் ரத்து ஆயூ கென்கோனோ சாரி அல்லது செரி குஸ்தி கஞ்செங் ரத்து ஆயூ கெகோனோகதிசாரி (Sri Gusti Kanjeng Ratu Ayu Kencono Sari atau Sri Gusti Kanjeng Ratu Ayu Keconohadisari)[2] என்று கடல் தேவதை காஞ்சனா அழைக்கப்பட்டார். இவர் ஒரு நாளைக்கு பல முறை தன் தோற்றத்தை மாற்றிக் கொள்ளும் திறன் கொண்டவர் என்றும் நம்பப்படுகிறது.
ஒருமுறை இந்தோனேசியாவின் முன்னாள் துணை அதிபர் சுல்தான் அமெங்குபுவானா IX (Hamengkubuwono IX), கடல் தேவதை காஞ்சனாவுடனான தனது ஆன்மீகச் சந்திப்பின் அனுபவத்தை விவரித்து இருக்கிறார். கடல் தேவதை காஞ்சனா, பொதுவாக முழு நிலவின் போது ஓர் இளம் பெண்ணாகவும்; மற்ற நேரங்களில் ஒரு வயதான பெண்ணின் வடிவத்திற்கும் தோற்றத்திற்கும் மாறிக் கொள்ள முடியும் என்று சொல்லி இருக்கிறார்.[3][4]
தங்கும் விடுதிகள்
[தொகு]ஜாவா மற்றும் பாலியின் தெற்கு கடற்கரையில் உள்ள தங்கும் விடுதி உரிமையாளர்கள் கடல் தேவதை காஞ்சனாவின் பெயரில் சிறப்பு அறைகளை வழங்குகிறார்கள். பாலி, சனூர் நகரில் கிராண்ட் பாலி பீச் தங்கும் விடுதியில் (Grand Bali Beach Hotel) உள்ள 327 மற்றும் 2401-ஆம் அறைகள் மிகவும் பிரபலமானவை. அகுங் ஒகாவதி என்று அழைக்கப்படும் ஓர் இந்து மதப் பாதிரியார், 327-ஆம் அறையைப் பாதுகாத்து வருகிறார்.[5] சனவரி 1993-இல் ஏற்பட்ட ஒரு பெரும் தீ விபத்தில் எரியாமல் இருந்த ஒரே அறை 327-ஆம் அறை மட்டுமே ஆகும்.[5]
மேற்கு ஜாவாவின் பெலாபோகான் ரத்து எனும் இடத்தில் உள்ள சமுத்திரா தங்கும் விடுதியின் (Samudra Beach Hotel) தெற்குப் பகுதியில் கடல் தேவதை காஞ்சனாவுக்காக, பச்சை வண்ணம் பூசப்பட்ட 308-ஆம் அறை ஒதுக்கப்பட்டு இருக்கிறது.[6]
1966-ஆம் ஆண்டிலேயே,[7] இந்தோனேசியாவின் முதல் அதிபர் சுகார்னோ, சமுத்திரா கடற்கரை தங்கும் விடுதிக்கான இடத்தைத் தீர்மானிப்பதில் ஈடுபட்டிருந்தார். 308-ஆம் அறை முன்னால் ஒரு வாதுமை மரம் உள்ளது. அங்கு சுகார்னோ தனது ஆன்மீக எழுச்சியைப் பெற்றார் என்றும் அறியப்படுகிறது.[8]
மேலும் காண்க
[தொகு]காட்சியகம்
[தொகு]கடல் தேவதை காஞ்சனா காட்சிப் படங்கள்:
மேலும் படிக்க
[தொகு]- Marshall, A. 2008. The Gods Must Be Restless: Living in the shadow of Indonesia's volcanoes. National Geographic Magazine.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Herman Utomo dan Silvie Utomo. 2008. Dialog dengan Alam Dewa. Jakarta: Kelompok Spiritual Universal.
- ↑ Karaton Surakarta, Yayasan Pawiyatan Kabudayaan Karaton Surakarta, Sekilas Sejarah Keraton Surakarta, R.Ay. Sri Winarti P, 2004
- ↑ Bogaerts, Els. Scription Van sunans, sultans en sultanes; Ratu Kidul in the Panitik Sultan Agungan - M.A. Thesis, Rijskuniversiteit Leiden, Holland
- ↑ Sultan Hamengkubuwono IX memoire "Takhta untuk Rakyat"
- ↑ 5.0 5.1 Robin, Ketut (2 July 2010). "THE MYSTERY OF ROOM 327; Almost all rooms in the hotel were destroyed by the fire. However, for some reason Room 327 was still intact. There was no sign of fire or damage inside the room". island of bali (in ஆங்கிலம்). Retrieved 28 February 2025.
- ↑ Döhne, Roy James. "Room 308 A room for the Javanese goddess of The South Sea". Website Roy James. Retrieved July 5, 2007.
- ↑ Schlehe, J. Tourism to Holy Sites and Pilgrimage to Hotel Rooms in Java. IIAS News.
- ↑ "The hotel was built towards the end of the Soekarno era using war compensation funds from the Japanese". www.travelweekly-asia.com (in ஆங்கிலம்). Retrieved 28 February 2025.
வெளி இணைப்புகள்
[தொகு]பொதுவகத்தில் Dewi Sri தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.