உள்ளடக்கத்துக்குச் செல்

கடற்பனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Fennoscandia ப் பகுதியை குளிர்காலத்தில் ஒரு செயற்கைக்கோள் பிடித்த படம். Gulf of Bothnia வும், [[[:en:White Sea]] வெண்கடலும்] (White Sea) கடல் பனியால் மூடப்பட்டிருக்கும் தோற்றம்.

கடல்பனி (Sea ice) என்பது கடல் நீரானது உறையும்போது தோன்றும் பனிக்கட்டிகளைக் குறிக்கும். கடல் நீரானது உப்பைக் கொண்டிருப்பதனால், இதன் உறைநிலையானது தூய நீரை விடவும் குறைவாகவே இருக்கும். கடல்நீரானது தனது உறைநிலையை (அண்ணளவாக -1.8 °C (28.8 °F)) அடையும்போது உறைந்து கடல் பனியாக மாறும்.

இந்தக் கடல் பனி, பனிமலை களின் (Iceberg) இயல்பிலிருந்து வேறுபடுகின்றது. பனிமலைகள் பனியாறு, பனியடுக்கு போன்றவற்றில் ஏற்படும் பனித் தகர்வு (Ice calving) செயல்முறையினால், அவற்றிலிருந்து திடீரென உடைந்து, பிரிந்து செல்லும் பெரும்பகுதி பனிக்கட்டியை மலைபோலக் கொண்டதாக இருக்கும். இந்த பனிமலைகள் திறந்த நீர்நிலைகளில் தாமாக மிதந்தபடி இருக்கும். அத்துடன் பனிமலைகள் பனியடுக்கு அல்லது பனியாற்றிலிருந்து வருவதனால், ஆரம்பத்தில் இருந்தே நன்னீரைக் கொண்டதாக இருக்கும். ஆனால் கடல் பனியானது, ஆரம்பத்தில் உப்பைக் கொண்டிருந்தாலும், பின்னர் அதன் தோற்ற மாற்றச் செயல்முறையின்போது, உப்பை இழந்து நன்னீராக மாற்றமடையும்.[1][2][3]

படத்தொகுப்பு

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Wadhams, Peter (1 January 2003). "How Does Arctic Sea Ice Form and Decay?". Arctic theme page. NOAA. Archived from the original on 2005-03-06. Retrieved 25 April 2005.
  2. Weeks, Willy F. (2010). On Sea Ice. University of Alaska Press. p. 2. ISBN 978-1-60223-101-6.
  3. Shokr, Mohammed; Sinha, Nirmal (2015). Sea Ice – Physics and Remote Sensing. John Wiley & Sons, Inc. ISBN 978-1119027898.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடற்பனி&oldid=4164942" இலிருந்து மீள்விக்கப்பட்டது