கடங்கநேரி
கடங்கநேரி | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 8°55′N 77°33′E / 8.92°N 77.55°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தென்காசி |
ஏற்றம் | 127 m (417 ft) |
மொழிகள் | |
• அலுவல்முறை | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 627 854 |
வாகனப் பதிவு | TN72,TN76 |
மக்களவை தொகுதி | தென்காசி |
மாநிலச் சட்டப் பேரவை தொகுதி | ஆலங்குளம் தொகுதி |
கடங்கநேரி (Kadanganeri) என்பது தமிழ்நாட்டிலுள்ள, தென்காசி மாவட்டத்தில், ஆலங்குளம் தாலுகாவில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கடங்கனேரி ஊராட்சிக்கு உட்பட்டது ஆகும். இந்த ஊராட்சியில் கடங்கனேரி மற்றும் வெங்கடேஸ்வரபுரம் ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளன. இக்கிராமம் ஆலங்குளம் சட்டமன்றதொகுதியின் கீழ் வருகிறது.[1]
பெயர்க் காரணம்
[தொகு]கடங்கநேரி என்ற பெயர் எப்படி ஏற்பட்டது என்பதற்கு வரலாற்று ஆதாரங்கள் உறுதியாகக் கிடைக்காவிட்டாலும், கிடங்கு எனும் சொல்லை அடிப்படையாகக் கொண்டு தொடக்கத்தில் ‘கிடங்கனேரி’ என்றே இவ்வூர் அழைக்கப்பட்டு வந்ததாகவும், இதுவே காலப்போக்கில் மருவிக் கடங்கநேரி ஆனதாகவும் ஊர் மக்கள் வாய்மொழியாக வழங்கி வருகின்றனர். இதற்கேற்றாற் போல் இந்த ஊரே சற்றுத் தாழ்வான பூமியாகத்தான் உள்ளது. அஞ்சல் அலுவலகத்தில் கூட இன்னும் ‘கிடங்கனேரி’ எனும் பெயரே காணப்படுகிறது.
வானிலை
[தொகு]வெப்பநிலை டிகிரியில் | வெப்பநிலை ஃபாரங்கீட்டில் | காற்றின்வேகம் | ||
---|---|---|---|---|
சராசரி | 22-37 | 71.6-98.6 | 16KM/H |
மக்கள்தொகை
[தொகு]மொத்த மக்கள் தொகை 7487, இதில் ஆண்கள் - 3691 மற்றும் பெண்கள் - 3796 ஆவர்.
பள்ளிகள்
[தொகு]இக்கிராமத்தில் ஒரே ஒரு ஆரம்பபள்ளி உள்ளது. இப்பள்ளியின் பெயா் சரஸ்வதி வித்யாசாலை தொடக்கப்பள்ளி மற்றும் குழந்தைகளுக்கு இரண்டு அங்கன்வாடிகள் உள்ளன. "கிராம கமிட்டி மேல்நிலைப்பள்ளி" என்ற பெயரில் இந்த கிராமத்தின் எல்லைக்குள் ஒரு மேல்நிலைப்பள்ளி அமைக்கப்பட்டுள்ளது.
கல்லூரிகள்
[தொகு]இக் கிராமத்தில் கல்லூரி இல்லை. ஆனால் சி.எஸ்.ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இந்த கிராமத்திலிருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ளது. இவை தவிர வேறுசில கல்லூரிகளையும் மாணவா்கள் தோ்ந்தெடுத்து படிக்கிறாா்கள்.
அவை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:
- ராணி அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி - காந்தி நகர் [திருநெல்வேலி]
- ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரி - சீதாபர்பள்ளலூர் [திருநெல்வேலி]
- சர்தார் ராஜா பொறியியல் கல்லூரி - அத்தியுத்து [ஆலங்குளம்]
- எஸ். எம். மரியம் பாலிடெக்னிக் - ஆலங்குளம்
- சேவியர் கல்லூரி - பாளையங்கோட்டை
- புனித யோவான் கல்லூரி - பாளையங்கோட்டை
- சாரதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி -திருநெல்வேலி
- பெண்கள் சாராள் டக்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி - பாளையங்கோட்டை
வேலைவாய்ப்பு
[தொகு]இந்த கிராமத்தில் விவசாயத்தில் பலர் ஈடுபட்டுள்ளனா். பீடிசுற்றுதல் தொழிலானது இங்கு பெண்களுக்கு சுய வருமானத்தை பெற்றுதரும் தொழிலில் குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான பெண்கள் பீடி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஒரு சோப்பு உற்பத்தி தொழிற்சாலை இந்த கிராமத்திற்கு அருகில் வெங்கடேஸ்வரபுரத்தில் இயங்குகிறது. இது சக்தி சோப்பு தொழிற்சாலை என்று அழைக்கப்படுகிறது. இத்தொழிற்சாலை ஊதியம் மக்களுக்கு முக்கிய வருவாயில் ஒன்றாகும்.
கோயில்கள்
[தொகு]மேலும் சில கோயில்கள்
[தொகு]- தேவி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில்
- ஸ்ரீ கைக்கொண்ட அய்யனார் கோவில்
- ஸ்ரீ கருப்பசாமி கோவில்
- ஸ்ரீ எம்பெருமாள் சாஸ்தா கோவில்
- ஸ்ரீ உலகம்மன் கோவில்
- பிள்ளை வளா்த்தி சாஸ்தா கோவில்
- பிள்ளையார் கோவில்
- முருகன் கோவில்
- இசக்கி அம்மன் கோவில்
- நீலகண்ட உத்தம சாஸ்தா திருக்கோவில்
- கற்குவேல் அய்யனார் கோவில்
- காத்வராயன் கோவில்
திருவிழாக்கள்
[தொகு]அம்மன் கோவில் விழா
[தொகு]கிராம மக்கள் அனைவருக்கும் பொதுவான விழா ஆகும். வருடத்திற்கு இரண்டு முறை பங்குனி மற்றும் புராட்டாசி மாதத்தில் அம்மன் கோவில் விழா நடைபெறுகிறது். இவ்விழாவில் தேரோட்டம் நடைபெறும். இது விழாவின் இரண்டாவது நாள் இரவு தொடங்கி அடுத்த நாள் காலைவரை இருக்கும். கடங்கனேரியில் உள்ள அனைத்து தெருக்களிலும் தேரோட்டம் நடைபெறும். புரட்டாசி மாத திருவிழா பெரிய அளவில் நடைபெரும் 2ம் நாள் இரவு பூ மிதித்தல் நடைபெரும் முக்கிய கடவுள்: பத்ரகாளி அம்மன், முத்தாரம்மன்.
கைக்கொண்ட அய்யனார் கோவில் விழா
[தொகு]கைக்கொண்ட அய்யனார் கோவில் விழா ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. முக்கிய கடவுள்: கைக்கொண்ட அய்யனார்,கன்னியம்மை.
உலகம்மன் கோவில் திருவிழா
[தொகு]வருடத்திற்கு ஒரு முறை ஐப்பசி மாதத்தில் . உவாி சுயம்புலிங்க சாஸ்தா வகையராக்களால் கொண்டாடப்படுகிறது முக்கிய கடவுள்: சுயம்புலிங்க சாஸ்தா. கடங்கனேரி ஊரில் பழைமையான கோவிலும் இதுவே ஆகும்
கருப்பசாமி கோயில் திருவிழா
[தொகு]வருடத்திற்கு ஒரு முறை ஆடி மாதத்தில் . நாட்டாண்மை வகையராக்களால் கொண்டாடப்படுகிறது. முக்கிய கடவுள்: மேகலிங்க சாஸ்தா கருப்பசாமி - கருப்பசாமி
பிள்ளை வளா்தி சாஸ்தா கோவில் விழா
[தொகு]இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை பிள்ளை வளா்தி சாஸ்தா வகையராக்களால் கொண்டாடப்படுகிறது. முக்கிய கடவுள்: பிள்ளைய வள்ளி சாஸ்தா - பிள்ளை வளர்த்தி சாஸ்தா
இசக்கி அம்மன் கோவில் விழா
[தொகு]வருடத்திற்கு ஒரு முறை தை மாதத்தில் கடைசி வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. முக்கிய கடவுள்: இசக்கி அம்மன்
கற்குவேல் அய்யனார் கோவில் திருவிழா
[தொகு]வைகசி மாதத்தில், வருடத்திற்கு ஒரு முறை கற்குவேல் அய்யனார் சாஸ்தா வகையராக்களால் கொண்டாடப்படுகிறது. முக்கிய கடவுள்: கற்குவேல் அய்யனார்
வடக்குத்தி அம்மன் கோவில் விழா
[தொகு]அம்மன் கோவில் திருவிழாவுடன் இந்த கோயில் விழா நடைபெறும். முக்கிய கடவுள்: வடக்குத்தி அம்மன்
தேவாலயங்கள்
[தொகு]கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று ஊாின் வடகோடியில் உள்ளது.
தொழில்
[தொகு]கிராமப்புற பொருளாதாரத்தில் வேளாண்மை முக்கிய பங்கு வகிக்கிறது. விவசாய வேலைகளில் பெண்களும், ஆண்களும் ஈடுபடுகிறாா்கள். இருப்பினும் பெரும்பாலான பெண்கள் பீடி சுற்றும் தொழில் செய்கிறாா்கள். 99.99% மக்களுக்கு விவசாய நிலம் சொந்தமாக உள்ளது. 0.01% பேர் கூலி வேலை செய்கிறார்கள்.
சுற்றுலா இடங்கள்
[தொகு]அருகிலுள்ள முக்கிய சுற்றுலா இடங்கள்: குற்றாலம் - கடங்கனேரியிலலரந்து 39.6 கி.மீ தூரத்தில் உள்ளது. தென்காசி தாலுக்கிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இந்த குற்றாலம் அமைந்துள்ளது. பிரபலமான நீர்வீழ்ச்சிகள் இங்கு உள்ளன. பாபநாசம், திருநெல்வேலி - கடங்கனேரியிலிருந்து 44.1 கி.மீ தூரத்தில் உள்ளது. இங்கு பாபநாசா் ஆலையம் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. அகஸ்தியர் அருவி - கடங்கனேரியிலிருந்து 46.8 கி.மீ தூரத்தில் உள்ளது.இங்குள்ள அகஸ்தியர் நீர்வீழ்ச்சி சுற்றுலா பயணிகளை கவர்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kadanganeri Rd, Kadanganeri, Tamil Nadu, India". Findlatitudeandlongitude.com. பார்க்கப்பட்ட நாள் 2013-11-07.