உள்ளடக்கத்துக்குச் செல்

கஜேந்திர சிங் கிம்சார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கஜேந்திர சிங் கிம்சார்
கஜேந்திர சிங் கிம்சர்
பஜன்லால் சர்மா அமைச்சரவை
இராஜஸ்தான் அரசு
பதவியில் உள்ளார்
பதவியில்
30 திசம்பர் 2023
ஆளுநர்கல்ராஜ் மிஸ்ரா
பஜன்லால் சர்மா அமைச்சரவை
  • மருத்துவம் & சுகாதாரம்
  • மருத்துவம் & சுகாதாரப் பணிகள் (இ.எஸ்.ஐ)
முன்னையவர்பர்சாதி லால் மீனா
பதவியில்
20 திசம்பர் 2013 – 17 திசம்பர் 2018
இரண்டாவது ராஜே அமைச்சரவை அமைச்சகம் மற்றும் துறைகள்
  • எரிசக்தி
  • வெளிநாடு வாழ் இந்தியர்
  • தொழில்
  • தில்லி -மும்பை தொழில்பாதை
  • பொதுத்துறை
  • இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை
  • சுற்றுச்சூழல்
  • வனம்
மாநில அமைச்சர்
இராஜஸ்தான் அரசு
பதவியில்
31 மே 2004 – 10 திசம்பர் 2008
வசுந்தரா ராஜே சிந்தியா முதல் அமைச்சரவை மற்றும் பதவி
  • ஆற்றல் துறை
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு25 திசம்பர் 1957 (1957-12-25) (அகவை 67)
ஜோத்பூர் மாவட்டம், இராசத்தான், இந்தியா
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்
பிரீத்தி குமாரி (before 1982)
பிள்ளைகள்2
பெற்றோர்ஓன்கார் சிங் (தந்தை)
சினேகலதா தேவி (தாயார்)
வாழிடம்சிம்சார் கோட்டை, நாகௌர்
முன்னாள் மாணவர்மேற்கு ஆண்டாரியோ பல்கலைக்கழகம்
பணிஅரசியல்வாதி
தொழில்வணிகம்

கஜேந்திர சிங் கிம்சார் (Gajendra Singh Khimsar) (பிறப்பு 25 டிசம்பர் 1957) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த இராசத்தான் மாநில அரசியல்வாதி ஆவார். பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இவர் தற்போதைய இராசத்தான் மாநில அரசின் மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சராக உள்ளார். இவர் 13,14,16 வது ராஜஸ்தான் சட்டமன்றத்தின் உறுப்பினராக லோஹாவத் தொகுதியையும் 12 வது மாநில சட்டப்பேரவையில் நாகௌர் தொகுதியையும் பிரதிநிதுத்துவப் படுத்தினார்.[1]

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

கிம்சார் 1959 இல் இராசத்தான் மாநிலத்தில் உள்ள கிம்சார் கோட்டை என்ற இடத்தில் பிறந்தார். இவர் தனது பள்ளிப்படிப்பை டூன் பள்ளியில் முடித்தார். மேலும் கனடாவில் உள்ள மேற்கு ஆண்டாரியோ பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாக இளங்கலை படிப்பை முடித்துள்ளார்.

அரசியல் வாழ்க்கை

[தொகு]
கிம்சார் கோட்டை

2003 முதல் ராஜஸ்தானின் லோஹாவத் சட்டப் பேரவையின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[2] மேலும் 2003 முதல் 2008 வரை இவர் எரிசக்தி அமைச்சராக பொறுப்புகளை வகித்தார்.[3] இரண்டாவது முறை அமைந்த வசுந்தரா ராஜே சிந்தியா அமைச்சரவையில் வனம், சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.[4]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

குடும்பம்

[தொகு]

கிம்சார் 25 பிப்ரவரி 1982 அன்று பிரித்தி குமாரி என்பவரை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.[1]

விளையாட்டு மற்றும் வணிகம்

[தொகு]

தனது கல்லூரி படிக்கும் காலத்தில் கிம்சார் ஸ்குவாஷ் உலகக்கோப்பை வாகையர் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார் . , பிஎஸ்ஏ (தொழில்முறை ஸ்குவாஷ் கூட்டமைப்பு) உலக தரவரிசையில் 28 வது இடத்தைப் பிடித்தார். இவர் கனடாவில் 2ஆவது இடத்தையும் பிடித்தார் மற்றும் ஐக்கிய அமெரிக்க மற்றும் கனடிய ஓபனின் இறுதிப் போட்டியாளராகவும் இருந்தார்.[5] தொழில் ரீதியாக ஒரு உணவகவிடுதி உரிமையாளராக கிம்சார் குழும உணவு விடுதிகளை நடத்தி வருகிறார்.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Rajasthan MP MLA". rajasthanmpmla.com. 2012-01-05. Archived from the original on 2012-01-05. Retrieved 2020-08-18.
  2. "परिसीमन के बाद से अब तक जीतते आए हैं गजेंद्र सिंह खींवसर, लोहावट विस क्षेत्र में प्रधान को साथ लेकर चलना है चुनौती". Patrika News (in hindi). 12 November 2018. Retrieved 2020-08-18.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. "Raje finds space for all". archive.indianexpress.com. 9 December 2003. Retrieved 2020-08-18.
  4. "List of State Cabinet Members". rajassembly.nic.in. Archived from the original on 2001-10-09.
  5. "Archive News". The Hindu (in ஆங்கிலம்). Retrieved 2020-08-18.
  6. "Market Experts Advice, Recommendations, Information & News by Gajendra Singh Khimsar at Moneycontrol.com". www.moneycontrol.com. Retrieved 2020-08-18.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=கஜேந்திர_சிங்_கிம்சார்&oldid=4194318" இலிருந்து மீள்விக்கப்பட்டது