உள்ளடக்கத்துக்குச் செல்

கஜர் ஈரான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கஜர் ஈரான் (Qajar Iran) என்பது 1789 முதல் 1925 வரை கஜர் அரச மரபால் ஆளப்பட்ட ஈரானிய அரசை[1] குறிப்பதாகும்.[2][3] கஜர் அரச மரபானது கஜர் பழங்குடியினத்தை சேர்ந்தவர்களால் உருவாக்கப்பட்டது. இவர்கள் துருக்கிய பூர்வீகத்தை கொண்டிருந்தனர்.[4][5][6] 1794ஆம் ஆண்டு கஜர் குடும்பமானது ஈரானின் முழு கட்டுப்பாட்டையும் பெற்றது. ஜன்ட் அரச மரபின் கடைசி ஷாவான லோத்பு அலி கானை பதவியில் இருந்து தூக்கி எறிந்தது. காக்கேசியாவின் பெரும்பாலான பகுதிகள் மீது ஈரானிய இறையாண்மையை மீண்டும் நிலைநாட்டியது. 1796இல் மஸ்சாத்தை எளிதாக அகா முகம்மது கான் கஜர் கைப்பற்றினார்.[7] அப்சரித்து அரச மரபை முடிவுக்கு கொண்டு வந்தார். ஈரானின் ஜார்ஜியா குடிமக்களுக்கு எதிராக தண்டனை கொடுத்த படையெடுப்புக்கு பிறகு இவர் அதிகாரபூர்வமாக ஷாவாக முடிசூட்டிக் கொண்டார்.[8]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Abbas Amanat, The Pivot of the Universe: Nasir Al-Din Shah Qajar and the Iranian Monarchy, 1831–1896, I. B. Tauris, pp 2–3
  2. Choueiri, Youssef M., A companion to the history of the Middle East, (Blackwell Ltd., 2005), 231,516.
  3. Abbas Amanat, The Pivot of the Universe: Nasir Al-Din Shah Qajar and the Iranian Monarchy, 1831–1896, I. B. Tauris, pp 2–3; "In the 126 years between the fall of the Safavid state in 1722 and the accession of Nasir al-Din Shah, the Qajars evolved from a shepherd-warrior tribe with strongholds in northern Iran into a Persian dynasty."
  4. William Bayne Fisher.
  5. Dr Parviz Kambin, A History of the Iranian Plateau: Rise and Fall of an Empire, Universe, 2011, p.36, online edition.
  6. Cyrus Ghani.
  7. H. Scheel; Jaschke, Gerhard; H. Braun; Spuler, Bertold; T. Koszinowski; Bagley, Frank (1981). Muslim World. Brill Archive. pp. 65, 370. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-06196-5. பார்க்கப்பட்ட நாள் 28 September 2012.
  8. Michael Axworthy.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கஜர்_ஈரான்&oldid=3782011" இலிருந்து மீள்விக்கப்பட்டது