கசலா சாவத்
கசலா ஜாவத்து (Ghazala Javed பஷ்தூ: غزاله جاويد ; 1 ஜனவரி 1988 - 18 ஜூன் 2012 [1] ) பாக்கித்தானின் சுவாட் பள்ளத்தாக்கைச் சேர்ந்த ஒரு பாக்கித்தான் பஷ்தூன் பின்னணிப் பாடகர். அவர் 2004 ஆம் ஆண்டு முதல் தனது தொழில் வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளார். " கைபர் பக்துன்க்வாவில் இளம், முற்போக்கான இன பஷ்தூனாகப் பரவலாக அரியப்பட்டார். [2] அவரது இசை பாக்கித்தானில் மட்டுமல்லாது, அண்டை நாடான ஆப்கானிஸ்தானிலும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள பஷ்தூன் மக்களிடம் பரவலாக அறியப்பட்டது.
தொழில்
[தொகு]கசலா பாக்கித்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் சுவாத் பள்ளத்தாக்கில் 1 ஜனவரி 1988 இல் பிறந்தார். [3] 2007 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், பாக்கித்தான் தாலிபான்கள் சுவாத்தில் தங்கள் ஆதிக்கத்தினை வலுப்படுத்திக்கொண்டிருந்ததால், இளம் கசலா மற்றும் அவரது குடும்பத்தினர் பெசாவர் நகருக்கு தப்பிச் சென்றனர். அவர்கள் பெசாவரில் குடியேறினர் மற்றும் கசலா பாடகியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், பின்னர் "பரன் டி பரன் டை" மற்றும் "லாக் ராஷ கண" ஆகிய பாடல்களைப் பதிவு செய்தார். பின்னர் அவரது தொழில் வாழ்க்கையில், அவர் மேலும் பல மெல்லிசைப் பாடல்களைப் பாடினார், பாக்கித்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வெளிநாடுகளில் வாழும் பஷ்தூன் மக்களிடையே பரவலாக அறியப்பட்டார்.
அவர் துபாய் மற்றும் காபூலில் மேடை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளத் தொடங்கினார், அங்கு திருமண விழாக்களில் பாடுவதற்காக ஒரு இரவுக்கு $ 12,000 முதல் $ 15,000 வரை சம்பாதித்தார். ரேடியோ காபூலின் இயக்குனர் அப்துல் கனி முதகிக்கின் கூற்றுப்படி, "காபூலில் மற்ற பஷ்டூன் கலைஞர்களை விட அவருக்கு அதிக ஊதியம் வழங்கப்பட்டது. . . அவர் எங்கள் மிகவும் விரும்பப்பட்ட மற்றும் பிரபலமான பாஷ்டோ பாடகி ஆவார் எனக் கூறினார். " [4] அவரது பாடல்களான "ஜா லெவனே டா மேனா", "ஜா டா சா க்குலா டா ஃபிகார் வாரி யெம்", "கோ லெக் ராஷா ராஷா கானா" மற்றும் "மேனா பா கவோ ஜனனா மேனா பா கவோ" ஆகியவை நேர்மறையான விமர்சன வரவேற்பைப் பெற்றன.[5] அவர் 2010 இல் பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் மற்றும் 2011 இல் கைபர் விருதைப் பெற்றார்.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]பிப்ரவரி 7, 2010 அன்று, கசலா பெசாவரில் சொத்துக்களை விற்பனை செய்து வருபவரான ஜஹாங்கீர் கானை மணந்தார், ஆனால் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக தனது தந்தையுடன் வசித்து வந்தார். அவர் ,தன் கணவனுக்கு ஏற்கனவே ஒரு மனைவி இருப்பதனை அறிந்தார், இது ஜாவேதிலிருந்து பிரிந்து செல்ல வழிவகுத்தது. நவம்பர் 2010 இல், அவர் தனது கணவரைப் பிரிந்து தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். அக்டோபர் 12, 2011 அன்று, கசலா ஜஹாங்கிரிடம் இருந்து விவாகரத்து கோரி சுவாத்தில் உள்ள அஸ்கரின் குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். நீதிமன்றம் அவருக்கு ஆதரவாக 4 டிசம்பர் 2011 அன்று தீர்ப்பளித்தது. [6]
இறப்பு
[தொகு]கசலா, ஜூன் 18, 2012 அன்றுஅவரது தந்தையுடன் சேர்ந்து,இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது ஒருவரால் சுடப்பட்டார்.[7] டிசம்பர் 16, 2013 அன்று, சுவாத் மாவட்ட மற்றும் குற்றவியல் நீதிமன்றம் அவரது முன்னாள் கணவர் ஜஹாங்கீர் கான், அவரையும் அவரது தந்தையையும் கொன்ற குற்றவாளி என்று கண்டறிந்து, அவருக்கு 70 மில்லியன் ரூபாய் அபராதத்துடன் இரண்டு மரண தண்டனையும் வழங்கியது. [8] [9] 22 மே 2014 அன்று பெசாவர் உயர் நீதிமன்றம் பாதிக்கப்பட்ட இருவரின் வாரிசுகளுக்கும் ஜஹாங்கீர் கானுக்கும் இடையிலான சமரசத்தின் அடிப்படையில் தண்டனையை ரத்து செய்தது. [10]
சான்றுகள்
[தொகு]- ↑ "Popular Pakistani singer Ghazala Javed shot dead". Daily News (New York) இம் மூலத்தில் இருந்து 2012-06-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120623073350/http://india.nydailynews.com/newsarticle/4fe0b0c3b1e35d2e13000001/popular-pakistani-singer-ghazala-javed-shot-dead.
- ↑ "The Day the Music Died". Newsweek. http://europe.newsweek.com/pashtun-singing-star-ghazala-javed-why-was-she-killed-65543?rm=eu.
- ↑ "Popular Pakistani singer Ghazala Javed killed". https://www.bbc.co.uk/news/world-asia-18501962.
- ↑ "The Daily Beast". The Daily Beast. பார்க்கப்பட்ட நாள் 2016-12-17.
- ↑ "Khyber Pakhtunkhwa female singers re-emerge". Central Asia Online. October 2, 2010. http://centralasiaonline.com/cocoon/caii/xhtml/en_GB/features/caii/features/pakistan/entertainment/2010/10/02/feature-02. பார்த்த நாள்: October 10, 2011.
- ↑ "Ghazala Javed: Singer who defied Taliban's decree is shot dead in" (in en-GB). The Independent. 2012-06-20. https://www.independent.co.uk/news/world/asia/ghazala-javed-singer-who-defied-talibans-decree-is-shot-dead-in-north-western-pakistan-7866612.html.
- ↑ "Popular female Pakistani singer killed in drive-by shooting". June 19, 2012. http://edition.cnn.com/2012/06/18/world/asia/pakistan-singer-killed/index.html.
- ↑ "Pashto singer Ghazala Javed's ex-husband sentenced to death". The Express Tribune. 17 December 2013.
- ↑ "Pakistan's Ghazala Javed murder: Ex-husband to hang for killing singer" (in en-GB). BBC News. 2013-12-17. https://www.bbc.co.uk/news/world-asia-25409367.
- ↑ "Ex-husband acquitted in singer’s murder case". DAWN.COM. 2014-05-23. http://www.dawn.com/news/1108133.