ககவுசு மொழி
Appearance
ககவுசு Gagauz | |
---|---|
Gagauz dili, Gagauzca | |
நாடு(கள்) | மல்டோவா, உக்ரைன், உருசியா, துருக்கி |
பிராந்தியம் | ககவுசியா |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 174,000 (2000–2007)e17 |
துருக்கியம்
| |
இலத்தீன் (ககவுசு அரிச்சுவடி) | |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | gag |
ககவுசு மொழி (Gagauz dili, Gagauzca) துருக்கிய மொழிகளில் ஒன்று. மல்டோவாவின் தெற்கு பகுதியில் ககவுசு தன்னாட்சி மண்டலத்தில் ஆட்சி மொழியாகும். இப்பகுதியை தவிர, உக்ரைன், துருக்கி, ரசியா ஆகிய நாடுகளில் ககவுசு மக்கள் வசிக்கும் இடங்களிலும் பேசப்படுகிறது. துருக்கி மொழிக் குடும்பத்தின் ஒகுஸ் பிரிவில் சேர்ந்த மொழிகளில் ககவுசு ஒன்று. துருக்கிய மொழி, அசர்பைஜான் மொழி, கிரிமிய தத்தார் மொழி, துருக்குமேனிய மொழி ஆகிய மொழிகளுக்கும் ககவுசு மொழிக்கும் ஒற்றுமை உள்ளது.
சோவியத் ஒன்றியத்தின் ஆட்சியின் பொழுது சிரிலிக் எழுத்துமுறையால் எழுதப்பட்டது, ஆனால் தற்போது இலத்தீன் எழுத்துமுறையின் ஒரு வகையுடன் எழுதப்படுகிறது.