ஓலன் (துணைக்கறி)
Appearance
ஓலன் துணைக்கறி | |
மாற்றுப் பெயர்கள் | ഓലൻ |
---|---|
தொடங்கிய இடம் | இந்தியத் துணைக்கண்டத்தின் தென்பகுதி |
பகுதி | இந்திய துணைக்கண்டம் |
தொடர்புடைய சமையல் வகைகள் | இந்திய சமையல் |
வேறுபாடுகள் | வழக்கமானது, நம்பூதிரி சமையல் |
ஓலன் (ஒலிப்பு [oːlan]) என்பது தென்னிந்தியாவில் உள்ள கேரள மாநிலத்தின் கேரள உணவு வகைகளின் ஒரு துணைக்கறி உணவாகும். இது வெள்ளைப் பூசணி அல்லது சாம்பல் பூசணி, காராமணி (Black-eyed peas), தேங்காய் பால் இஞ்சி ஆகிய காய்கறிகள் சேர்த்து சமைத்த பின்னர் தேங்காய் எண்ணெயில் தாளிக்கப்படுகிறது. இது கேரளாவின் காரமில்லாத சுவை மிக்க துணைக்கறியாகும். [1] இது பொதுவாக ஓணம் பண்ண்டிகையின் போது இடம்பெறும் சத்யா (விருந்தின்) ஒரு பகுதியாக பரிமாறப்படுகிறது. [1]
செய்முறை
[தொகு]கேரள பாணி
[தொகு]தேவையான பொருட்கள்
- காராமணி - 1 கப்
- வெள்ளை பூசணி - 1 கப்
- பூசணி - 1 கப்
- பச்சை மிளகாய் - 3-4
- தேங்காய் பால் - 1½ கப்
- கறிவேப்பிலை - 5-6
- எண்ணெய் - 1 தேக்கரண்டி
- உப்பு
செய்முறை
- காராமணியை இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
- 3/4 விசில் வரும் வரை வரை பிரஷர் குக்கரில் வேகவிடவும்.
- நறுக்கிய பூசணி, உப்பு மற்றும் கீறிய பச்சை மிளகாய் சேர்க்கவும்.
- சிறிது தண்ணீர் சேர்த்து சமைக்கவும்.
- பூசணிக்காய் மற்றும் காராமணி முழுவதுமாக வெந்ததும், அதில் கறிவேப்பிலை சேர்த்து தேங்காய் எண்ணெயில் தாளிக்கவும்.
- தேங்காய் பால் சேர்த்து 3-4 நிமிடங்கள் மிதமான சூட்டில் கொதிக்க விடவும்.
வகைகள்
[தொகு]நம்பூதிரி வகை ஓலன் சற்று வித்தியாசமானது.
மேலும் பார்க்கவும்
[தொகு]- கேரளாவின் உணவு வகைகள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Sathyendran, Nita (September 10, 2016). "Onam on a leaf". The Hindu. பார்க்கப்பட்ட நாள் September 20, 2018.
வெளி இணைப்புகள்
[தொகு]- nammuderuchikal.com/olan பரணிடப்பட்டது 2020-10-29 at the வந்தவழி இயந்திரம் - ஓலன் செய்முறை
- Youtube - தயாரிப்பு வீடியோ