ஓப்கின்சு-கோல் வினை
Appearance
ஓப்கின்சு-கோல் வினை (Hopkins-Cole reaction) புரதங்களில் டிரிப்டோபான் இருப்பதைக் கண்டறிய உதவும் ஒரு சோதனையாகும். கிளையாக்சிலிக் அமில வினை என்ற பெயராலும் இச்சோதனை அழைக்கப்படுகிறது[1]. புரதக் கரைசலுடன் கிளையாக்சிலிக் அமிலம் உள்ள ஓப்கின்சு-கோல் வினைப்பொருள் சேர்க்கப்படுகிறது. அடர் கந்தக அமிலத்தை மெதுவாக இக்கரைசலில் சேர்த்தால் இரண்டு அடுக்குகள் உருவாகின்றன. புரதத்தில் டிரிப்டோபான் இருந்தால் இரண்டு அடுக்குகளுக்குமிடையில் கருஞ்சிவப்பு நிற வளையம் உருவாகும்[2][3]. நைட்ரைட்டுகள், குளோரேட்டுகள், நைட்ரேட்டுகள், குளோரைடுகள் உருவாக்கத்தில் இருந்து வினை பாதுகாக்கப்படுகிறது[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ R.A. Joshi (2006). Question Bank of Biochemistry. New Age International. p. 64. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-224-1736-4.
- ↑ Debajyoti Das (1980). Biochemistry. Academic Publishers. p. 56. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-80599-17-5.
- ↑ P. M. Swamy (2008). Laboratory Manual on Biotechnology. Rastogi Publications. p. 90. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7133-918-1.
- ↑ Chatterjea (1 January 2004). Textbook of Biochemistry for Dental/Nursing/Pharmacy Students. Jaypee Brothers Publishers. p. 51. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8061-204-6.
.