ஓடுகாலிப்பாம்பு
ஓடுகாலிப்பாம்பு | |
---|---|
![]() | |
தென் இந்தியாவில் ஒரு ஓடுகாலிப்பாம்பு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | A. fasciolata
|
இருசொற் பெயரீடு | |
Argyrogena fasciolata (Shaw, 1802) | |
வேறு பெயர்கள் | |
ஓடுகாலிப்பாம்பு (Argyrogena fasciolata) என்பது ஒரு நஞ்சில்லா பாம்பு இனமாகும். இவை மிக வேகமாக ஊர்ந்து செல்லக்கூடியன எப்பதால் ஓடுகாலிப்பாம்பு என்று பெயர்பெற்றன.[3]
புவியியல் எல்லை
[தொகு]இப்பாம்புகள் இந்தியாவில் வட வங்காளம், காஷ்மீர் போன்ற இடங்களைத்தவிர அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது.[4] மேலும் இலங்கை, பாக்கித்தான், நேபாளம், வங்காளதேசம் போன்ற நாடுகளிலும் காணப்படுகிறது.
விளக்கம்
[தொகு]இப்பாம்பு பழுப்பு நிறமுடைய பாம்பு ஆகும். கழுத்தைவிட அகன்ற தலையும், கூர்மையான மூக்கும் கொண்டது. இதன் நீண்ட முகவாய் இதை பிற பாம்புகளுடன் பிரித்தறிய உதவுகிறது. இது வழுவழுப்பான செதில்கள் கொண்டது. நீண்ட ஒல்லியான உடலமைப்பு, வால் சற்று நீண்டு மொத்த உடலில் மூன்றில் ஒரு பங்கு இருக்கும். பிறக்கும்போது இந்த பாம்புகளுக்கு உடலில் பிரகாசமான வெள்ளை நிற வரிப்பட்டைகளிருக்கும். வளர்ந்து பருவமு எய்திய நிலையில் பட்டைகள் இல்லாமல் போகும். தலையில் நன்கு தெரியும் வெண்ணிறக் குறிகளும், பிடரியில் '][' போன்ற குறியும் காணப்படும். அடிப்பகுதி வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும். வட்டவடிவ பழுப்பு நிறக் கண்ணில் நடுவில் கருப்பு பாவை இருக்கும்.
இப்பாம்பின் மொத்த நீளம் 1060 மிமீ (3.5 அடி); இதில் வால் 220 மிமீ (8.5 அங்குலம்) இருக்கும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ The Reptile Database. www.reptile-database.org.
- ↑ Boulenger, G.A. 1893. Catalogue of the Snakes in the British Museum (Natural History), Volume I. London.
- ↑ "நல்ல பாம்பு 16: ஜோசப் கண்டறிந்த ஓடுகாலி". Hindu Tamil Thisai. Retrieved 2023-02-05.
- ↑ "Argyrogena fasciolata (Shaw, 1802) Banded Racer". Indian Snakes. Archived from the original on ஜூலை 5, 2013. Retrieved March 21, 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)