ஓகா தொடருந்து நிலையம்
Appearance
ஓகா தொடருந்து நிலையம் | |||||
---|---|---|---|---|---|
![]() | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | ஓகா, தேவபூமி துவாரகை மாவட்டம், குஜராத் இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 22°28′18″N 69°04′36″E / 22.471733°N 69.076770°E | ||||
ஏற்றம் | 5 m (16 அடி) | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
இயக்குபவர் | மேற்கு இரயில்வே மண்டலம் | ||||
தடங்கள் | விராம்காம்-ஓகா இருப்புப்பாதை | ||||
நடைமேடை | 3 | ||||
இருப்புப் பாதைகள் | 3 | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | Standard | ||||
தரிப்பிடம் | ஆம் | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | பயன்பாட்டில் | ||||
நிலையக் குறியீடு | OKHA | ||||
மண்டலம்(கள்) | மேற்கு இரயில்வே மண்டலம் | ||||
கோட்டம்(கள்) | ராஜ்கோட் | ||||
வரலாறு | |||||
திறக்கப்பட்டது | 1922 | ||||
மின்சாரமயம் | ஆம் | ||||
முந்தைய பெயர்கள் | ஜாம்நகர்-துவாரகை இரயில்வே | ||||
|
ஓகா தொடருந்து நிலையம் (Okha railway station), இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் தேவபூமி துவாரகை மாவட்டத்தில் அரபுக் கடற்கரையில் அமைந்துள்ளது. இது மேற்கு இரயில்வே மண்டலத்தின் ராஜ்கோட் இரயில்வே கோட்டத்தில் உள்ளது. இந்நிலையம் துவாரகைக்கு மேற்கே 30.6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
முதன்மைத் தொடருந்துகள்
[தொகு]ஓகா தொடருந்து நிலையத்திலிருந்து இந்தியாவின் பல நகரங்களுக்கு தொடருந்துகள் இயக்கப்படுகிறது.[1] அவைகளில் சில பின் வருமாறு:
- 19567/19568 விவேக் விரைவு தொடருந்து - ஓகா-தூத்துக்குடி[2]
- 15635 / 15636 துவாரகை எக்ஸ்பிரஸ் - குவகாத்தி -ஓகா[3]
- 15045/15046 -கோரக்பூர்-ஓகா விரைவு வண்டி
- 16337/16338 எர்ணாகுளம் - ஓகா விரைவு வண்டி
- 19251/19252 சோமநாதபுரம்-ஓகா விரைவு வண்டி
- 22969/22970 ஓகா–வாரணாசி அதிவிரைவு வண்டி
- 22905/22906 ஓகா- ஹவுரா அதிவிரைவு வண்டி
- 16733/16734 இராமேசுவரம்-ஓகா விரைவு வண்டி
- 19575/19576 ஓகா-நாத்துவாரா (ராஜ்சமந்து மாவட்டம்) விரைவு வண்டி
- 20819/20820 புரி- ஓகா விரைவு வண்டி
- 19565/19566 தேராதூன்-ஓகா விரைவு வண்டி
- 19573/19574 ஓகா-ஜெய்ப்பூர் வாராந்திர விரைவு வண்டி
- 22945/22946 மும்பை சென்டிரல்- ஓகா, சௌராஷ்டிரா மெயில்[4]